முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தலையற்ற முண்டமாக வலம் வந்த நபர்.. கூகுள் மேப்பில் இருந்த படத்தால் பரபரப்பு

தலையற்ற முண்டமாக வலம் வந்த நபர்.. கூகுள் மேப்பில் இருந்த படத்தால் பரபரப்பு

காட்சி படம்

காட்சி படம்

கூகுள் மேப்ஸ் தளத்தில் இதுபோன்று சுவாரஸ்யமான படங்கள் வெளியாகுவது இது முதல்முறை அல்ல.

நாம் விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கான வழியை கண்டுபிடிப்பதற்கு மிக எளிமையான உதவியை கூகுள் மேப்ஸ் வழங்குகிறது. நம்மில் பெரும்பாலானோர் இதை வாடிக்கையாகப் பயன்படுத்தி வருகிறோம். தற்போது, பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் தரும் விஷயம் ஒன்றிற்காக சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் கூகுள் மேப்ஸ் ஈர்த்துள்ளது.

கூகுள் மேப்ஸ் தளத்தில் காணப்பட்ட இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் படத்தில், தலையற்ற முண்டமாக ஒரு நபர் நியூயார்க் வீதிகளில் நடமாடுவதைப் போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

நியூயார்க் நகரின் புரூக்ளின் நேவி யார்டு பகுதியில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று பல தரப்பு மக்களும் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, இது ஃபோட்டாஷாப் செய்யப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். அதே சமயம், இன்னும் சிலர் இதை தாங்கள் நேரில் பார்த்திருப்பதாக கூறினர்.

தலையற்ற நிலையில் உலா வரும் இந்த ஃபோட்டோ எடிட் செய்யப்பட்டது அல்ல. கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்த படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எந்தவொரு நபரும் இன்றி, வெறும் உடையை வைத்து அலங்காரம் செய்யப்பட்ட ஃபோட்டோ தான் இது என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். மற்றொரு தரப்பினர், இதேபோன்ற தலையற்ற உருவம் சாலையில் நடனம் ஆடுவதையும், குரும்புத்தனம் செய்வதையும் நேரில் பார்த்ததாக சிலர் குறிப்பிடுகின்றனர்.

also read : 85 வயதில் இப்படி ஒரு சாதனையா! அசர வைக்கும் பாட்டி..

கூகுள் மேப்ஸ் தளத்தில் இதுபோன்று சுவாரஸ்யமான படங்கள் வெளியாகுவது இது முதல்முறை அல்ல. சீன பெருஞ்சுவர் குறித்த படத்தை அண்மையில் கூகுள் மேப்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தபோது, சுவாரஸ்யமான காட்சி ஒன்று தென்பட்டது.

அதாவது, கற்களால் பொறிக்கப்பட்ட சுவர் எழுத்துக்கள் கொண்ட படம் ஒன்று தென்படுவதை அவர் கண்டறிந்தார். அந்தப் படத்தை ரெடிட் தளத்தில் அவர் பகிர்ந்து கொண்டார்.

also read : வைரலாகும் மிக அரிதான வெள்ளை நிற கங்காரு புகைப்படம்!

தொடர்புடைய இடத்தை மற்ற யூசர்களும் பார்த்துக் கொள்ளும் வகையில், கூகுள் மேப்ஸ் சேர்ச் பாரில் தேடுவதற்கான முகவரியையும் (40.4499299, 116.5487750) என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட அந்த சுவர் எழுத்துகளில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று அவர் நெட்டிசன்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து நெட்டிசன்கள் விளக்கம் அளித்தபோது, சீனாவின் தந்தையாக போற்றப்படும் மாவோவுக்கு புகழஞ்சலி செலுத்தும் வாசகங்கள் அந்த சுவர் எழுத்துகளில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்தனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுவர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது மரம் மற்றும் செடிகள் படர்ந்து மோசமான நிலையில் அது காட்சியளிக்கிறது.

First published:

Tags: Trending