Home /News /trend /

Google Doodle: மலையாள இலக்கியத்தின் பாட்டி 'பாலாமணி அம்மா' யார் இவர்?

Google Doodle: மலையாள இலக்கியத்தின் பாட்டி 'பாலாமணி அம்மா' யார் இவர்?

பாலாமணி  அம்மா

பாலாமணி அம்மா

Google Doodle: மலையாள இலக்கியத்தின் பாட்டி என்று அழைக்கப்படும் பிரபல இந்தியக் கவிஞரான பாலாமணி அம்மாவின் 113வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கேரளாவைச் சேர்ந்த கலைஞர் தேவிகா ராமச்சந்திரனால் வடிவமைக்கப்பட்ட டூடுளை கூகுள் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
மலையாள இலக்கியத்தின் பாட்டி என்று அழைக்கப்படும் பிரபல இந்தியக் கவிஞரான பாலாமணி அம்மாவின் 113வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கேரளாவைச் சேர்ந்த கலைஞர் தேவிகா ராமச்சந்திரனால் வடிவமைக்கப்பட்ட டூடுளை கூகுள் வெளியிட்டுள்ளது.

1909 ஆம் ஆண்டு , திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புன்னயூர்குளத்தில் உள்ள அவரது பூர்வீக இல்லமான நாலாபட்டில் பிறந்தார் சித்தஞ்சூர் குன்ஹுன்னி ராஜா மற்றும் நலபட் கொச்சுகுட்டி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

பாலாமணி அம்மா எந்த முறையான பயிற்சியையும் அல்லது கல்வியையும் பெறவில்லை. மாறாக ஒரு பிரபலமான மலையாள கவிஞராக இருந்த அவரது மாமா நலப்பட் நாராயண மேனன் மூலம் வீட்டில் கல்வி பயின்றார். அம்மா சிறுவயதில் படித்த புத்தகங்கள் மற்றும் படைப்புகளின் அற்புதமான தொகுப்பு அவரை செதுக்கியது எனலாம். 19 வயதில், மலையாளப் பத்திரிகையான மாத்ருபூமியின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிர்வாக ஆசிரியரான வி.எம். நாயரை மணந்தார்.1930 ஆம் ஆண்டு, 21 வயதில், தனது முதல் கவிதையை கூப்புகை என்ற தலைப்பில் வெளியிட்டார். கொச்சி இராச்சியத்தின் முன்னாள் ஆட்சியாளரான பரீக்ஷித் தம்புரானிடமிருந்து ஒரு திறமையான கவிஞராக அவருக்கு முதல் அங்கீகாரம் கிடைத்தது. அவருக்கு சாகித்ய நிபுண புரஸ்காரம் வழங்கப்பட்டது.

இந்திய புராணங்களின் ஆர்வமுள்ள அம்மாவின் கவிதைகள், பெண் கதாபாத்திரங்கள் பற்றிய பாரம்பரிய புரிதலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அவரது ஆரம்பகால கவிதைகள் தாய்மையை ஒரு புதிய வெளிச்சத்தில் பெருமைப்படுத்தியது. அவர் "தாய்மையின் கவிஞர்" என்று அறியப்பட்டார்.

நிலவுக்கும் செவ்வாய்க்கும் புல்லட் ரயில்விடும் ஜப்பான் !

அவரது படைப்புகள் புராணக் கதாபாத்திரங்களின் யோசனைகள் மற்றும் கதைகளை உள்ளடக்கி இருந்தது. ஆனால் சாதாரண மனிதர்களாக இருந்த பெண்களை சக்திவாய்ந்த நபர்களாக சித்தரித்தன. அம்மா (1934), முத்தச்சி (1962) மற்றும் மழுவின் கதை (1966) ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகள்.
பாலாமணி அம்மா 20 க்கும் மேற்பட்ட கவிதை, உரைநடை மற்றும் மொழிபெயர்ப்புத் தொகுப்புகளை வெளியிட்டார். அவர் 1984 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலா தாஸின் தாயாவார்.1987 இல் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் பெற்றார் 1965 இல் முத்தசிக்கு சாகித்ய அகாடமி விருது; 1995 இல் நிவேத்யத்திற்காக சரஸ்வதி சம்மான் விருது, லலிதாம்பிகை அந்தர்ஜனம் விருது என்று பல .

பாலாமணி அம்மா 2004 இல் காலமானார்.அவரது தகனம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் மீதான அவரது அன்பை விவரிக்கும் அவரது கவிதைகளால் மலையாள கவிதையின் அம்மா (அம்மா) மற்றும் முத்தஸ்ஸி (பாட்டி) என்ற பட்டங்களைப் பெற்றார்.

மலையாளக் கவிஞர்களின் பிற்கால தலைமுறையினருக்கு அம்மா ஒரு உத்வேகமாக பணியாற்றினார். கொச்சி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அவரது பெயரில் எழுத்தாளர்களுக்கு பாலாமணி அம்மா விருது ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Google Doodle, Kerala, Literature, Sahitya Akademi

அடுத்த செய்தி