Home /News /trend /

வேடிக்கையான கேமுடன் பீட்சாவை கொண்டாடும் இன்றைய கூகுள் டூடுல்!

வேடிக்கையான கேமுடன் பீட்சாவை கொண்டாடும் இன்றைய கூகுள் டூடுல்!

பீசா

பீசா

சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 பில்லியன் பீட்சாக்கள் (அமெரிக்காவில் மட்டும் ஒரு நொடிக்கு 350 ஸ்லைஸ்கள்) விற்பனையாகி வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

    மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் உணவுகளில் ஒன்றான பீட்சாவை கொண்டாடுகிறது இன்றைய கூகுள் டூடுல். கூகுள் டூடுல் பிரபல உணவான இன்று பீட்சாவை வேடிக்கையான புதிர் கேமுடன் கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் விரும்பப்படும் மிகவும் பிரபலமான இத்தாலிய உணவுகளில் ஒன்றான பீட்சாவை அனிமேஷன் செய்யப்பட்ட டூடுல் கேமுடன் டாப்பிங்ஸ் மற்றும் ஸ்லைஸ்களின் அடிப்படையில் வெட்டும்படி யூஸர்களை கேட்கிறது டூடுல்.

    2007-ஆம் ஆண்டு இதே நாளில் நியோபோலிட்டன் (Neapolitan) சமையல் கலையான 'Pizzaiuolo' யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் சேர்க்கப்பட்டது. எனவே இந்த நாளை கொண்டாடும் வகையில், கூகுள் தனது யூஸர்களுக்காக ஒரு வேடிக்கையான கேமை வெளியிட்டுள்ளது.

    இந்த பீட்சா புதிர் கேம் (pizza puzzle game) உலகம் முழுவதிலுமிருந்து மிகவும் விரும்பப்படும் 11 பீட்சா டாப்பிங்ஸ்களை கொண்டுள்ளது. ஆர்டர் செய்யப்பட்ட பீட்சா வகையின் அடிப்படையில் அதை ஸ்லைஸ் செய்ய இந்த கேம் யூஸர்களுக்கு சேலஞ்ச் செய்கிறது.

    இருப்பினும் இந்த கேமை விளையாடுபவர்கள் பீட்சாவை வெட்டும் போது கோரப்பட்ட டாப்பிங்ஸ் மற்றும் ஸ்லைஸ்களின் எண்ணிக்கையை உன்னிப்பாக கவனித்து மனதில் கொள்ள வேண்டும். ஆர்டர் எவ்வளவு துல்லியமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமான ஒரு யூஸர் ஸ்டார்களை சம்பாதிக்க முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது. ஒருவர் தனது ஹோம் பேஜில் உள்ள Google லோகோவை கிளிக் செய்வதன் மூலம் இந்த கேமை விளையாடலாம், மேலும் அது யூஸர்களை interactive puzzle-க்கு அழைத்துச் செல்லும்.

    இன்றைய கூகுள் டூடுலில் டாப்பிங்ஸ்..

    கேமில் கூகுள் வழங்கும் சில பீட்சா ஆப்ஷன்கள் இவை தான்: பெப்பரோனி பீட்சா (சீஸ், பெப்பரோனி), ஒயிட் பீட்சா (சீஸ், ஒயிட் சாஸ், மஷ்ரூம்ஸ், ப்ரோக்கோலி), கலபிரேஸ் பீட்சா(சீஸ், கலபிரேஸ், ஆனியன் ரிங்ஸ், ஹோல் ப்ளாக் ஆலிவ்ஸ்), மார்கெரிட்டா பீட்சா (சீஸ், தக்காளி, துளசி), மொஸெரெல்லா பீட்சா (சீஸ், ஓரிகானோ, ஹோல் க்ரீன் ஆலிவ்ஸ்), ஹவாய்ன் பீட்சா (சீஸ், ஹாம், அன்னாசி), மக்யரோஸ் பீட்சா (சீஸ், சலாமி, வெங்காயம், மிளகாய் மிளகு), டெரியாக்கி மயோனைஸ் பீட்சா (சீஸ், டெரியாக்கி சிக்கன், கடற்பாசி, மயோனைஸ்), டாம் யம் பீட்சா (சீஸ், இறால், காளான்கள், மிளகாய்த்தூள், எலுமிச்சை இலைகள்), பனீர் டிக்கா பீட்சா (பனீர், குடைமிளகாய், வெங்காயம், மிளகுத்தூள்) மற்றும் டெசர்ட் பீட்சா.

    நியோபோலிடன் ஆர்ட் 'பிஸ்ஸாயுலோ' என்றால் என்ன?

    யுனெஸ்கோவின் கூற்றுப்படி, "நியோபோலிட்டன் 'பிஸ்ஸாயுலோ' (Pizzaiuolo) கலை என்பது நான்கு வெவ்வேறு கட்டங்களை உள்ளடக்கிய ஒரு சமையல் நடைமுறை. இது மாவை தயாரிப்பது மற்றும் அதை அடுப்பில் சுடுவது மற்றும் பேக்கரின் சுழற்சி இயக்கத்தை உள்ளடக்கியது. இது இத்தாலியில் உள்ள Campania பிராந்தியத்தின் தலைநகரான நேபிள்ஸில் உருவானது. மேலும் 1700-களின் பிற்பகுதியில் பீட்சாவின் பிறப்பிடமாக நேபிள்ஸ் பரவலாக கருதப்படுகிறது.

    எகிப்து முதல் ரோம் வரையிலான பண்டைய நாகரிகங்களில் பல நூற்றாண்டுகளாக ஃபிளாட்பிரெட் (flatbread) பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தென்மேற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸ் இன்று அறியப்படும் பீட்சாவின் (தக்காளி மற்றும் சீஸ் கொண்டு அடுக்கப்பட்ட மாவு) பிறப்பிடமாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 பில்லியன் பீட்சாக்கள் (அமெரிக்காவில் மட்டும் ஒரு நொடிக்கு 350 ஸ்லைஸ்கள்) விற்பனையாகி வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
    Published by:Archana R
    First published:

    Tags: Google Doodle

    அடுத்த செய்தி