• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கூகுள் தலைமை நிறுவன அதிகாரி தினமும் காலையில் என்ன செய்வார் தெரியுமா? அவரே கூறிய தகவல்!

கூகுள் தலைமை நிறுவன அதிகாரி தினமும் காலையில் என்ன செய்வார் தெரியுமா? அவரே கூறிய தகவல்!

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

CEO சுந்தர் பிச்சை அவர்களின் காலை நேரப் பழக்க வழக்கம், நம்முடைய இந்திய அம்மாக்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்றுவது போலவே இருக்கிறது.

  • Share this:
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்பதை அனைவரும் அறிவார்கள். பலருக்கும் இவரது அன்றாட பழக்க வழக்கம் பற்றிய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கலாம். இவர் காலை நேரப் பழக்கம் சமீபத்தில் வெளியானது. இவரின் பழக்கம் இந்திய அம்மாக்களால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு, ஐஎஸ்ஐ முத்திரை மட்டுமே குத்தப்படவில்லை என்பது மட்டுமே சிறிய குறையாக இருக்கிறது.

சுந்தர் பிச்சை அவர்களின் காலை நேர ‘ரொட்டீன்’ என்ன?

நீங்கள் இந்தியாவில் பிறந்து, ஒரு இந்திய அம்மாவால் வளர்க்கப்பட்டிருந்தால், அல்லது எங்குப் பிறந்திருந்தாலும், ஒரு இந்திய அம்மாவால் வளர்க்கப்பட்டிருந்தால், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்க அம்மாக்கள் சொல்லும் தாரக மந்திரம் ஒன்றே ஒன்று தான் – காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பது.

இந்திய அம்மாக்களின் மிகப்பெரிய கவலை, தன்னுடைய பிள்ளைகள் தாமதமாக எழுவது ஆகும். ஏழு மணி ஆகும் போதே, எட்டு மணி ஆகிவிட்டது எழுந்திரு என்று நேரத்தை விட வேகமாகச் செல்வதில் அம்மாக்கள் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

அது மட்டுமின்றி, இலவச இணைப்புகளாக மற்றும் பல்வேறு பொன்னான ஆலோசனைகளும் அம்மாக்கள் ஒவ்வொரு நாளும் கூறுவதை நீங்கள் பலரும் கேட்டிருக்கலாம். அவற்றில் சில, காலையில் நடைப்பயிற்சி பழக்கத்தை மேற்கொள்வது, பழங்கள் சாப்பிடுவது, அலைபேசி பயன்படுத்துவதைக் கிட்டத்தட்ட நிறுத்துவது உள்ளிட்டவை அடங்கும்.

இந்தியப் பெற்றோர்கள், ஆன்மீக ரீதியான ஆலோசனைகளைப் பின்பற்றுகிறார்கள். அதுமட்டுமின்றி, பெரும்பாலான பெற்றோர்கள் அதிகாலையில் எழுந்து, செய்தித்தாள் வாசிப்பது, காபி அல்லது தேநீர் பருகுவது, என்று பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கத்தை இன்றும் மேற்கொள்கிறார்கள். அதே போலவே, ‘அதிகாலையில் கண்விழித்தால், வாழ்வில் முன்னேறலாம், உங்களுக்கு வாழ்வில் எந்த பிரச்சனையும் ஏற்படாது’ என்றும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். தங்களுடைய மரபணுக்களைப் போலவே, ‘அதிகாலை எழுந்தால் சாதிக்க முடியும்’ என்பதைத் தலைமுறை தலைமுறையாக அடுத்தடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்வதில் தவறியதே இல்லை.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, CEO சுந்தர் பிச்சை அவர்களின் காலை நேரப் பழக்க வழக்கம், நம்முடைய இந்திய அம்மாக்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்றுவது போலவே இருக்கிறது.

Also read... தனது அன்பு மனைவியின் ஆசையை நிறைவேற்ற சுழலும் வீட்டை உருவாக்கிய கணவர்!

கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில் தன்னுடைய காலைப் பழக்கத்தைப் பற்றிய கூறியிருந்தார். சுந்தர் பிச்சை அவர்களின் காலை நேரம் எப்படி இருக்கும், அவர் என்னவெல்லாம் செய்வார் என்பதைப் பற்றிய விவரங்கள் இங்கே.

இவர் காலையில் சீக்கிரமாக எழுவதையே விரும்புகிறார். இவர் தினமும் காலை 6:30 முதல் 7 மணிக்குள் எழுந்து விடுவார். பின்னர், எல்லா வீடுகளிலும் இருப்பது போலவே, செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் கொண்டவர். இவர் விரும்பிப்படிக்கும் செய்தித்தாள் வால் ஸ்ட்ரீட் ஜர்னல். சில நேரங்களில் நியூயார்க் டைம்ஸ் படிப்பார். சுந்தர் பிச்சை இந்தியாவில் , சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அதனாலேயே, இவருடைய காலை நேர பழக்கம் பல வருடங்கள் ஆனாலும்கூட இவருடன் ஒட்டிக்கொண்டது.

மேலும், காலை எழுந்தவுடன் தேநீர் குடிப்பார் என்று குறிப்பிட்டிருந்தார். அதே போல, சிற்றுண்டிக்கு, ஆம்லெட், பிரெட் டோஸ்ட் மற்றும் தேநீர்: காலை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாதபோது பலருடைய காலை உணவாக பொதுவாக இந்திய வீடுகளில் காணப்படுவது பிரட்டும் ஆம்லெட்டும் தான்.

சென்னையில் படித்து, தற்போது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் என்ற நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டு மற்றும் இந்திய இளைஞர்களின் கதாநாயகனாக மிளிர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: