Home /News /trend /

வீடியோவை அன்மியூட் செய்ய மறந்த சுந்தர் பிச்சை - வைரலாகும் வீடியோ

வீடியோவை அன்மியூட் செய்ய மறந்த சுந்தர் பிச்சை - வைரலாகும் வீடியோ

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் அன்மியூட் செய்யாமல் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கும் நமக்கும் ஒரு சில சமயங்களில் பெரிதாக வேறுபாடு இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால், அவரே அதைக் கூறியுள்ளார். 'நானும் உங்களைப் போல ஒருவன் தான்' என்று இந்தியாவில் பிறந்து, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அதற்கான காரணம், ஒரு கியூட்டான வீடியோ!

  கடந்த சில மாதங்களாக இணையம் வழியாகத்தான் பலரும் பல காரணங்களுக்காக சந்தித்து வருகிறோம். அலுவலகத்தில் அப்ரைசல் முதல், மீட்டிங்கில் திட்டு வாங்குவது வரை, முதல் நண்பர்களோடு ஜாலியாக உரையாடும் சந்திப்புகள் முதல், மருத்துவ ஆலோசனை யோகா பயிற்சிகள் வரை எல்லாமே வெப்காம் வழியாகத்தான் செயல்படுகிறது. மீட்டிங் நடக்கும் பொழுது அல்லது இணையம் வழியாக மற்றவருடன் உரையாடும் பொழுது, சில நேரங்களில் மியூட் செய்ய அல்லது அன்மியூட் செய்ய மறந்து விடுவோம். எவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் அவரும் நம்மைப் போன்ற ஒருவர் தான். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் அன்மியூட் செய்யாமல் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  கெர்மிட் என்ற ஒரு தவளையுடன் பேசிய இரண்டு நிமிட வீடியோ உரையாடலை சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ யூடியூபில் புதிய டியர் எர்த் என்ற கருப்பொருளின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு நம்முடைய சுற்றுசூழலை மேம்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வின் ஒரு பகுதி ஆகும்.

  டிஸ்னியின் மிகவும் பிரபலமான ஒரு கதாபாத்திரமான கெர்மிட் தவளை, முதலில் வீடியோவில் சுந்தர் பிச்சையை வரவேற்கிறது. ஆனால் அதற்கு சுந்தர் பிச்சை தன்னுடைய வீடியோவை அன்மியூட் செய்யாமலேயே பதிலளித்திருக்கிறார். உடனேயேகெர்மிட், "சுந்தர் நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னால் நம்பவே முடியவில்லை கூகுளின் சிஇஓ இப்போது என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார் ஆனால் அவர் ம்யூட்டில் இருக்கிறார்" என்று ஆச்சரியப்பட்டது.

  Also Read : ஊழியர்களுக்கு தலா 10,000 டாலர், ஃப்ளைட் டிக்கெட்ஸ் - அசத்தல் போனஸை அறிவித்த முதலாளி!

  அப்போது தான் சுந்தர் பிச்சை தன்னுடைய வீடியோவை அன்மியூட் செய்யவில்லை என்பதை உணர்ந்தார். சிரித்துக்கொண்டே கெர்மிட்டிடம் ஸா சொல்லி "நான் ம்யூட்டில் இருந்தேன், கவனிக்கவில்லை. இந்த ஆண்டு இதே போல பலமுறை நடந்துள்ளது நானும் மற்றவர்களைப் போல தானே" என்று அவர் புன்னகையோடு பதிலளித்தார்.  வீடியோவில் டியர் எர்த் சீரிஸ் பற்றி சுந்தர் பிச்சையும் கெர்மிட்டும் பல விஷயங்களை விவாதித்தனர்.சுற்றுப்புற சூழலை, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு எல்லா உயிரினங்களும் நீண்ட காலம் வாழ்வதற்கு தகுதியானபடி மாற்றுவதற்கான முன் முயற்சியாக யூடியூப் நிறுவனம் பல்வேறு பிரபலமான கார்ட்டூன் கேரக்டர்களை வைத்து இதைப் போன்ற உரையாடல்களை வெளியிட்டு வருகிறது.

  நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர், கூகுளில் எவ்வளவோ விஷயங்களை நான் கற்றுள்ளேன். குறிப்பாக இந்த உலகில் 8,384 நீர்வாழ் உயிரினங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா என்று கெர்மிட் பிச்சையை பாராட்டி பேசியது.அதுமட்டுமின்றி அவர்கள் பொதுவாக விரும்பும் பல்வேறு ஆக்டிவிட்டிகளான சமையல் மற்றும் அறிவியல் பற்றியும் தங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொண்டனர்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Google, Sundar pichai

  அடுத்த செய்தி