தனது காதலியை தினமும் சந்தித்து முத்தமிட்டு செல்லும் கோல்டன் ரெட்ரீவர் நாய்.. வைரல் வீடியோ!

கோல்டன் ரெட்ரீவர் நாய்

நாய்களின் வீடியோவை காணும் போது ரெட்-ஐ பார்னி வெறித்தனமாக காதலித்து வருவது தெரிகிறது.

  • Share this:
கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று தனது காதலியை தினமும் சந்தித்து முத்தமிட்டு செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும் அவை நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது. பார்னி என்று அழைக்கப்படும் அந்த நாய், தனது சுற்றுப்புறத்திற்கு அருகே உள்ள மற்றொரு பெண் கோல்டன் ரெட்ரீவர் நாயை சந்திக்க செல்வது வழக்கம். பெண் நாயின் பெயர் ரெட் ஆகும். மேலும் நாய்களின் வீடியோவை காணும் போது ரெட்-ஐ பார்னி வெறித்தனமாக காதலித்து வருவது தெரிகிறது.

ஒவ்வொரு நாளும் காலையில் பார்னி நடைபயணம் செல்லும்போது ரெட் இருக்கும் தோட்டத்தின் சுவரை நோக்கி ஓடி செல்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக டிக்டோக்கில் வைரலான ஒரு வீடியோவில், பார்னி ரெட்-ஐ பார்க்க சுவரின் மேலே ஏறுவது போல நின்று கொண்டிருக்கிறது. மேலும் இரு நாய்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட சந்தோஷத்தில் துள்ளி குதிக்கின்றன. அந்த வீடியோவில், பார்னி ரெட்-ஐ முத்தமிட முயன்றபோது, ரெட் பவுன்ஸ் செய்து மேலே வர முயற்சிக்கிறது. பார்னி மற்றும் ரெட் இடம்பெறும் வீடியோ ஒரு டிக்டாக் யுசரால் வெளியிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்களுக்கிடையேயான காதலைச் சித்தரிக்கும் விதத்தில் வீடியோவின் பின்னணியில் ‘நெவர் ஃபர்கெட் யூ’ (Never Forget You) என்ற பாடல் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீடியோவை, அதில் சேர்க்கப்பட்ட இசையுடன் கேட்கும் போது ஒரு டிஸ்னி திரைப்படம் பார்ப்பது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். இந்த வைரல் வீடியோ தொடர்பாக மிரர் வெளியிட்ட தகவலின்படி, இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

Also read... தண்ணீர் தொட்டியில் சிக்கி கொண்ட புதிதாக பிறந்த யானை குட்டி - வைரலாகும் மீட்பு வீடியோ!

பார்னி மற்றும் ரெட் நாய் உரிமையாளர்கள் இவர்களை ஒன்று சேர்க்க டேட்டிங்-ஐ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல யூசர்கள் கருதது தெரிவித்துள்ளனர். இதற்கு பார்னியின் உரிமையாளர் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறியுள்ளார். இந்த ஜோடி வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் காதலிக்க வேண்டும் என்றும் பல டிக்டாக் யூசர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிலும் மனதை கவரும் செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் பல பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர், டிக்டாக் என சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. அதன்படி வீட்டினுள் வளர்க்கப்படும் நாய்களின் வீடியோக்கள் உள்ளன. அதில் பெரும்பாலும் கோல்டன் ரெட்ரீவர் நாய்களின் வீடியோக்கள் தான் அதிகம். சமீபத்தில் இந்த இன நாய்கள் கார் ஓட்டுவது, சர்பிங் செய்வது, கட்டிப்பிடிப்பது போன்று தங்கள் உரிமையாளர்களுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.
அதேபோல, இந்த ஆண்டு மே மாதம், டக்கர் என்ற கோல்டன் ரெட்ரீவர் பல ஸ்னாப்சாட் ஃபேஸ் ஃபில்டர்களை முயற்சித்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகியது. செல்லப்பிராணி காதலர்கள் மற்றும் நாய் பிரியர்களுக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஆறுதல் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: