• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தனது வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து கின்னஸ் சாதனை படைத்த நாய்!

தனது வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து கின்னஸ் சாதனை படைத்த நாய்!

வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து கின்னஸ் சாதனை படைத்த நாய்

வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து கின்னஸ் சாதனை படைத்த நாய்

கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் தனது வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து சாதனை படைத்திருக்கிறது. பின்னிபாய்மோலி என்பவர் இந்த கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்த்து வருகிறார்.

  • Share this:
கின்னஸ் சாதனை என்பது உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். மனிதர்கள் முதல் விலங்குகள் வரை என அனைவரும் செய்யும் சாதனைகளும் இந்த புத்தகத்தில் அடங்கும். 1955 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27 அன்று முதன் முதலில் ‘கின்னஸ்’ புத்தகம் வெளியானது. இதனை ஹியூக்,நோரிஸ் மற்றும் ரோஸ் மெக்வெரிட்டர் ஆகியோர் சேர்ந்து வெளியிட்டனர்.

இந்த நிலையில் தற்போது கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் தனது வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து சாதனை படைத்திருக்கிறது. பின்னிபாய்மோலி என்பவர் இந்த கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்த்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கோல்டன் ரெட்ரீவர் நாய் தனது வாயில் பந்துகளுடனும், கின்னஸ் சாதனை புத்தகத்துடனும் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் ‘இந்த செய்தி பெரிய செய்திதான். இது நிச்சயமாக எளிதானது அல்ல. இந்த சாதனை மிகப்பெரியது. நானே இந்த சாதனையை படைத்தது போல உணர்கிறேன். என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் கின்னஸ் நிறுவனத்திற்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

2017ம் முதலில் பின்னிபாய்மோலியின் தந்தை இந்த கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்த்து வந்த நிலையில், இந்த நாய் வாயில் டென்னிஸ் பந்துகளைத் தொடுவதற்கு ஒரு தனித்துவமான திறமை இருப்பதை கண்டறிந்தார். அவர் அடிக்கடி கோல்டன் ரெட்ரீவருக்கு ஒரு டென்னிஸ் பந்தை எறிவார். அது அந்த பந்தை பிடித்து மீண்டும் அவரிடமே எறிந்து விளையடும்.

Also read... 51 பப்புக்கு சென்று குடித்த இளைஞர் - கின்னஸில் இடம்பெறும் ஆச்சர்யமான சாதனை!

அவர் சில காலமாக இப்படியே பந்தை பிடிக்கும் பயிற்சி அளித்தார். இதனை தொடர்ச்சியாக ஒரு நாள் இதனை ஏன் சாதனையாக செய்யக்கூடாது என்ற யோசனை தோன்றியது. எனவே கோல்டன் ரெட்ரீவருக்கு தினமும் பயிற்சி அளித்து வந்துள்ளார். பின்னிபாய்மோலி தந்தைக்கு பின்னர் அவரே இந்த பயிற்சியை தொடர்ந்து வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பின்னிபாய்மோலி, 2020ம் ஆண்டே நாங்கள் இந்த சாதனையை படைத்தோம். இதற்கான சான்று இப்போது தான் கிடைத்துள்ளது. இந்த சாதனைக்கு முதன்மை காரணம் கோல்டன் ரெட்ரீவர் தான். இதற்கு முன்பு 2003ம் ஆண்டில் ஐந்து பந்துகளை வாயில் வைத்து இருந்ததற்கு கின்னஸில் இடம் பெற்றிருந்தது. இதே போல், ஜப்பானில் பீகில் என்ற இனத்தை சேர்ந்த நாய் ஒன்று சாதனை படைத்தது.

ஒரு நிமிடத்தில் 58 முறை நாயும், அதன் உரிமையாளரும் சேர்ந்து ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்தனர். இதற்கு முன்பு இவர்களே நிமிடத்திற்கு 51 என்ற சாதனையும் படைத்தது இருந்த நிலையில் அதனை அவர்களே முறியடித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: