• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Viral Video : பக்ரீதுக்கு விக்காம வீடு திரும்பிய போது.. ஆடுகளின் மகிழ்ச்சி நடனம் - வைரலாகும் பழைய வீடியோ

Viral Video : பக்ரீதுக்கு விக்காம வீடு திரும்பிய போது.. ஆடுகளின் மகிழ்ச்சி நடனம் - வைரலாகும் பழைய வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

பக்ரீதுக்கு விக்காம வீடு திரும்பிய போது என ஆடுகளின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ முகநூலில் வைரலாகிவருகின்றது.

  • Share this:
     பக்ரீத் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

    முஸ்லிம்கள், 'ஹஜ்' செய்வது என்பது, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது, புனிதப் பயணமாக மக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணம் கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இந்தப் பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டுக் கொடுக்கப்படுகிறது.

    பெரும்பாலும் உலகம் முழுவதும் இந்தப் பண்டிகை, தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அழ்ஹா என்றே அழைக்கப்பட்டாலும், இந்திய நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரீத் என அழைக்கப்படுகின்றது. பக்ரீத் பண்டிகைக்கு ஆடு வெட்டி அதனை சமைத்து உண்பது அவ்விழாவின் ஒரு அங்கமாக உள்ளது.

    இதனிடையே இந்த பண்டிகை தற்போது முடிந்து நாட்கள் ஆகிய நிலையில் இணையத்தில் ஆடுகள் கூட்டம் உற்சாகமாக நடந்து வரும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.அந்த வீடியோவில் பக்ரீதுக்கு விக்காம வீடு திரும்பிய போது என ஆடுகளின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ முகநூலில் வைரலாகிவருகின்றது.



    இந்த வீடியோ கடந்த ஆண்டும் இணையத்தில் வைரலானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: