மொபைல் ஃபோனை பயன்படுத்தி கொண்டே பல வேலைகளை செய்ய முயற்சிப்பது உயிருக்கே உலை வைக்கலாம்!

மொபைல் ஃபோனை பயன்படுத்தி கொண்டே பல வேலைகளை செய்ய முயற்சிப்பது உயிருக்கே உலை வைக்கலாம்!

மாதிரி படம்

பிறருடன் பேசி கொண்டிருக்கும் போது ஏன் வாகனம் ஓட்டும் போது மற்றும் சாலையில் நடக்கும் போது கூட ஸ்மார்ட் ஃபோன் ஸ்கிரீனில் தான் பலருக்கும் கவனம் உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தற்போது மனிதர்களின் ஆறாம் விரலாய் இருக்கும் ஸ்மார்ட் ஃபோனை தூங்கும் நேரம் தவிர மீதி அனைத்து நேரங்களிலும் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். சாப்பிடும் போது, பிறருடன் பேசி கொண்டிருக்கும் போது ஏன் வாகனம் ஓட்டும் போது மற்றும் சாலையில் நடக்கும் போது கூட ஸ்மார்ட் ஃபோன் ஸ்கிரீனில் தான் பலருக்கும் கவனம் உள்ளது. மொபைலை நொண்டி கொண்டே பலரும் பல வேலைகளை செய்யும் நிலையை கண்கூடாக பார்க்க முடிகிறது. இப்படி ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தி கொண்டே பல பணிகளை செய்ய முயற்சி செய்வது என்பது குறிப்பிட்ட நபரை பாதிக்கலாம், காயப்படுத்தலாம் அல்லது மரணத்திற்கு கூட காரணமாக அமையலாம் என்பதை புரிந்து கொள்ளாமல் பலர் உள்ளனர்.

ஒரு சாலை அல்லது மாலின் நடுவில் இருக்கும் போது அல்லது கார்களை ஓட்டும் போது தங்கள் மொபைலுக்கு வரும் கால் அல்லது மெசேஜால் திசை திருப்பப்படுவதன் மூலம், எதிரில் வரும் வேறு நபருக்கோ அல்லது மொபைலை பயன்படுத்தும் நபருக்கோ லேசானது முதல் தீவிரமான அசம்பாவிதங்கள் நடைபெற்றதற்கான ஆதாரபூர்வ வீடியோ காட்சிகள் பல உள்ளன. உதாரணமாக நடக்கும் போது அல்லது வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தியதால் குறிப்பிட்ட நபர்கள் கம்பத்தில் இடித்து கொள்வது அல்லது வேறு வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியது போன்ற வீடியோக்கள் இணையத்தில் உலா வருவதை பார்க்கலாம்.

இன்டர்நெட்டில் வெளிவந்த வீடியோ ஒன்றில் மாலில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மொபைலை நொண்டி கொண்டே சென்ற போது, அங்கிருந்த நீரூற்றில் தவறி விழுவது பதிவாகி இருந்தது. அதே போல வேறு வீடியோவில் ஸ்பெயின் நாட்டில் செல்போன் பேசிக்கொண்டே சென்ற பெண், மெட்ரோ ரயில் நிலைய பிளாட்பாரம் முடிந்தது கூட தெரியாமல் தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த சம்பவம் பதிவாகி இருந்தது. இந்நிலையில் அறிக்கை ஒன்றில் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதாவது, "மொபைல் போன்கள் கடுமையான கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன, மேலும் அவை சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடிய விஷயமாக மாறிவிட்டது.

வாகனம் இயக்கும் போது மொபைலை பயன்படுத்தும் ஓட்டுநர்கள், அதை பயன்படுத்தாத ஓட்டுநர்களை விட விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு சுமார் 4 மடங்கு அதிகம்" என்று கவலை தெரிவித்துள்ளது. வாகனங்களை ஓட்டுபவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்துவதால் அவர்களது கண்கள் மற்றும் மனது செல்லும் சாலையிலிருந்து விலகி விபத்தில் சிக்க வைக்கிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள பியூ ஆராய்ச்சி அறிக்கையில், 49% மக்கள் தாங்கள் சென்ற கார்களின் டிரைவர்கள், காரை ஓட்டியபடியே குறுஞ்செய்திகளை அனுப்பவும், படிக்கவும் செய்தனர் என்று கூறியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, 44% மக்கள் தங்களை அல்லது மற்றவர்களை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் செல்போனைப் பயன்படுத்திய டிரைவர்களின் கார்களில் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Also read... குடும்பமே மறுத்த நிலையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லீம் சகோதரர்கள்...!

அதே போல வாகனம் ஓட்டுவதை தவிர செல்போன் வைத்திருக்கும் அடல்ட்களில் ஆறில் ஒருவர் (17%), மொபைலில் மெய்மறந்து பேசியதால் அல்லது மெசேஜ் அனுப்பியதால் கவனமின்றி வேறொரு நபர் மீதோ அல்லது ஒரு பொருளிலோ உடல் ரீதியாக மோதி கொண்டதாக கூறி உள்ளனர். அதே போல படிக்கும் போது மொபைலை பயன்படுத்தும் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் நோட்ஸ் எடுப்பதில் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். மாணவர்கள் மொபைல்களைப் பயன்படுத்தாதபோது, தகவல்களை நினைவு வைத்து கொள்வதில் சிறப்பானவர்கள் என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். பொதுவெளியில் மொபைலில் மூழ்குவதால் ஏற்படும் அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு சில நாடுகளில் இதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்ற அதிகாரிகள் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வாகனம் ஓட்டும்போது மொபைல் போனைப் பயன்படுத்துவதை சட்டவிரோதமாக்குவது குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: