இந்த மாதிரியான தேளை வாழ்நாளில் பார்த்து இருக்கிறீர்களா? - வைரல் வீடியோ

தேள்

கொடிய விஷம் கொண்ட கொடுக்குகளை கொண்டிருக்கும் தேள் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

  • Share this:
தற்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் இணையத்தில் செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் மிகவும் விரும்பத்தக்கவையாக இருக்கின்றன. பெரும்பாலும் நாய், பூனை, பறவைகள் என பல விலங்குகள் செய்யும் சேட்டை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாவது உண்டு. அந்த வகையில் ஒரு தேளின் மேஸ்மரைசிங் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. கொடிய விஷம் கொண்ட கொடுக்குகளை கொண்டிருக்கும் தேள் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஏனெனில், தேள் கொட்டினால் அது உயிருக்கே ஆபத்தானதாக முடிவடையும். இந்த நிலையில், ஒளிரும் தேளின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. அதேபோல, சிலர் அதனை பார்ப்பதற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். The Reptile Zoo என்ற இன்ஸ்டா பேஜ் பகிர்ந்துள்ள வீடியோவில் இருட்டில் ஒளிரும் அராக்னிட்கள் இருப்பதைக் காணலாம். குறிப்பாக தேள் இருளில் ஒளிரும் என்பது இன்னும் வசீகரிக்கும் விஷயமாக இருக்கிறது. அதிலும் அந்த தேளின் மேல் ஏராளமான குட்டி தேள்கள் அமர்த்திருந்ததால் இருட்டில் பார்க்கும் போது தேளின் உடல் மட்டும் நியான் நிறத்தில் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் அதன் பின்கர்களும் நகங்களும் உடலைத் தவிர அதிகமாக பிரகாசித்தன. அதாவது அவை நீல நிற தொனியைக் கொண்டிருந்தன. இருட்டில் கருப்பு தேள் ஒளிர்ந்ததற்கான காரணம் அதன் முதுகில் குவியலாக இருந்த எண்ணற்ற குழந்தை தேள்களாக கூட இருக்கலாம். குட்டி தேள் தங்கள் வெளிப்புற எலும்புக்கூடுகளை உருவாக்கும் நேரம் வரை ஒளிராது. அதுவே கடுமையான ஓடுகளை கொண்டிருக்கும் தேள் ஒளிரும் தன்மை கொண்டதாக இருக்குமாம். அந்த வகையில் தனது உடலின் மேல் எண்ணற்ற குட்டிகளை சுமத்திருப்பதன் காரணமாகவே தேள் இருட்டில் ஒளிரும் தன்மையை பெற்றுள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by The Reptile Zoo (@thereptilezoo)






இந்த வீடியோவை பார்த்த பலரும், இது பார்ப்பதற்கும் மிகவும் மெஸ்மரைசிங்காக இருக்கிறது. இருப்பினும் அச்சுறுத்தும் விதமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 17,000திற்கும் மேற்பட்ட வியூஸ்களையும், ரீடிவீடுகளையும் பெற்றுள்ளது. கிட்ஸ் டிஸ்கவர் வலைத்தளத்தின்படி, அனைத்து தேள்களும் மின்சார பிளாக்லைட் அல்லது இயற்கை நிலவொளி போன்ற புற ஊதா ஒளியின் கீழ் ஒளிரும் என்று கூறப்படுகிறது.

Also Read :  ஜார்க்கண்டில் ஏலியனா? வைரல் வீடியோவின் பின்னணி!

குறிப்பாக தேள்களில் நீல-பச்சை பளபளப்பு அவற்றின் வெளிப்புற எலும்புக்கூட்டின் கடினமான பூச்சுகளில் காணப்படும் ஏதேனும் ஒரு பொருளால் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதனை ஒரு உறை என்று அழைக்கப்படுகிறது. தேள் தங்கள் உடல்பகுதியை சுற்றி கடினமாக எலும்புகளை வளர்த்தவுடன், அவற்றின் வெட்டு கடினமடையும் வரை அவை ஒளிராது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அராக்னிட்களில் ஒளிரும் தன்மை மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் என்றாலும், விஞ்ஞானிகள் அதன் செயல்பாடு குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
Published by:Vijay R
First published: