Home /News /trend /

கேமராவில் சிக்கிய அரியவகை கிளாஸ் ஆக்டோபஸ்..வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள் - வீடியோ!

கேமராவில் சிக்கிய அரியவகை கிளாஸ் ஆக்டோபஸ்..வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள் - வீடியோ!

ஆக்டோபஸ்

ஆக்டோபஸ்

கடலுக்கடியில் மிக சாதாரணமாக நீந்தி கொண்டிருந்த ட்ரான்ஸ்பரென்ட் ஆக்டோபஸின் வீடியோ சமூக வலைதளங்களை தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கடலுக்கடியில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த குழு படம்பிடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உடல் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்கும் கிளாஸ் ஆக்டோபஸின் வீடியோ நெட்டிசன்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. கடலுக்கடியில் மிக சாதாரணமாக நீந்தி கொண்டிருந்த ட்ரான்ஸ்பரென்ட் உடலமைப்பை கொண்டிருக்கும் உயிரினம் ஆச்சர்யத்தை மட்டுமே தருகிறது. இயற்கையின் படைப்பை நினைத்து பிரமிக்கவைக்கிறது.

இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு ஷ்மிட் ஓஷன் இன்ஸ்டிடியூட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. அதில், "கிளாஸ் ஆக்டோபஸ் என்பது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல அட்சரேகைகளில் உலகளவில் காணப்படும் ஆக்டோபஸின் ட்ரான்ஸ்பரென்ட் பெலஜிக் இனமாகும். இந்த ஆக்டோபஸின் ஒரே புலப்படும் அம்சங்கள் என்னவென்றால் அதன் பார்வை நரம்பு, கண் இமைகள் மற்றும் செரிமானப் பாதை (நடுவில் உள்ள வெள்ளித் துண்டு) ”என்று வீடியோவுடன் கேப்ஷன் செய்யப்பட்டிருந்தது.

இந்த வீடியோ மக்களை மெய்மறக்கச் செய்தது மற்றும் பலர் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்த பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். சிலர் இந்த வீடியோ அதிர்ச்சி அளிப்பதாகவும் ஆச்சர்யப்படுத்துவதாக இருப்பதாகவும் தங்களது ரியாக்சன்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஒரு யூசர் குறிப்பிட்டிருந்ததாவது, "அதை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது ஆனால் நிஜம் தானா என நம்ப முடியவில்லை" என கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு யூசர் "என்ன ஒரு அற்புதமான தோற்றமுடைய உயிரினம்" என்று தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் வீடியோ பதிவில் கமெண்ட் செய்திருந்த மூன்றில் ஒரு பகுதியினர் இதனை நம்பமுடியவில்லை என்றே கமெண்ட் செய்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிளாஸ் ஆக்டோபஸை கேமராவில் படம் பிடிப்பது மிகவும் என்பதே மிகவும் அரிதானது. ஏனெனில் அவை கடலுக்கடியில் ஆழமாக நீந்துகின்றன. இதுகுறித்து ஷ்மிட் பெருங்கடல் நிறுவனத்தின் இணை நிறுவனர் வெண்டி ஷ்மிட் டெய்லி மெயில் பத்திரிகையிடம் தெரிவித்தாவது, "பெருங்கடல் நாம் கற்பனை செய்ய முடியாத அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் கொண்டுள்ளது. அதில் மிகக் குறைவான அதிசயங்களே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன," என்று கூறினார்.

Also Read : 'திடீருனு செவ்வாய், வெள்ளி மட்டும் அசைவத்துக்கு நோ சொன்னாங்க' வைரலாகும் விஜயின் வீடியோ

"இதுபோன்ற ஒரு விஷயங்கள், எல்லா இடங்களிலும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கும் நன்கு புரிந்துகொள்வதற்கும் நாம் ஏன் முயற்சிக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கின்றன. ஏனென்றால் கடலில் தொடங்கும் பெரிய வாழ்க்கைச் சங்கிலி, மனித ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது." என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் மூலம் எந்த மூலைமுடுக்கில் நடக்கும் விஷயங்களையும் உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டலாம். அதேபோல, சமூக வலைத்தளங்கள் இப்போது மக்களின் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதையும் மறைக்க முடியாது. இதுபோன்ற சில அதிசயங்களை வைரலாக்கவும் மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கவும் சமூக வலைத்தளங்கள் முக்கிய அங்கமாக இருக்கின்றன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி