புறாவுக்கு ஒரு போர்டிங் பாஸ் கொடுங்கள் ப்ளீஸ்...! இணையத்தில் வைரலாகும் வீடியோ

புறாவுக்கு ஒரு போர்டிங் பாஸ் கொடுங்கள் ப்ளீஸ்...! இணையத்தில் வைரலாகும் வீடியோ
  • Share this:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்த விமானத்திற்குள் புறா ஒன்று அங்குமிங்கும் பறந்து வந்துள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருக்க தீடீரென புறா பறந்து வந்ததால் சிலர் புறாவை பிடிக்க முயன்றனர்.

அகமதாபாத் ஜெய்ப்பூர் இடையிலான கோ-ஏர் பயணிகள் விமானம் சமீபத்தில் 30 நிமிடங்கள் தாமதமானது. காரணம் என்னவென்றால், புறப்பட தயாராக இருந்த விமானத்தில் புறா ஒன்று நுழைந்துள்ளது. அது விமானத்தினுள் பறந்துகொண்டிருந்த போது விமானத்தில் இருந்த பயணிகள் அதனை வீடியோ எடுத்தனர். சிலர் அதனை பிடிக்கவும் முயன்றனர் ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

ஒரு வழியாக இறுதியாக புறா வெளியேறிய பின்னரே விமானம் புறப்பட்டது. ஆனால் விமானத்தினுள் புறா வந்தது எப்படி என்பதற்கு தற்போது வரை விடைகிடைக்கவில்லை.
    

First published: February 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading