முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மேக்கப் இல்லாமல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண் - என்ன நடந்தது?

மேக்கப் இல்லாமல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண் - என்ன நடந்தது?

மெலிசா ராஃப்

மெலிசா ராஃப்

Trending | இங்கிலாந்தில் நடைபெற்ற அழகு போட்டியில் முதல் முறையாக ஒரு போட்டியாளர் மேக்அப் இல்லாமல் பங்கேற்றுள்ளார்.

  • Last Updated :
  • inter, Indiaenglandenglandenglandengland

அழகி போட்டிகள் என்று வரும்பொழுது நாம் தவிர்க்கவே முடியாதவை, போட்டியில் கலந்து கொண்டவர்களின் விதவிதமான ஆடை, அணிகலன்கள், அலங்காரங்கள் மற்றும் மேக்கப்! மேக்கப் என்பது அழகி போட்டிகள், திரைத்துறையில் இருப்பவர்கள் மாடல்கள் உள்ளிட்டவர்கள் மட்டும் தான் பயன்படுத்துவார்கள் என்பதெல்லாம் எப்பொழுதோ மாறிவிட்டது.

சர்வதேச அழகிப் போட்டி முதல் உள்நாட்டு போட்டிகள் வரை எல்லாவற்றிலுமே வெற்றி பெரும் அல்லது முதல் சில இடங்களில் வரும் அழகிகள் பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் பிரபலமாக மாறும். அழகு என்பது தோற்றம் மற்றும் மட்டுமே கிடையாது, உள்ளுக்குள் இருக்கும் அழகை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அழகி போட்டியில் பங்கேற்பவர்கள், வெற்றி பெற்ற அழகிகள் சொன்னாலும், மேக்கப் அணிவது, சருமம் மாசு மருவில்லாமல் இருப்பது, கூந்தல் அலையலையாய் பறப்பது, என்று அழகின் வரைமுறை எழுதப்படாத விதிமுறையாகவே இருந்து வந்துள்ளது.

அழகி போட்டிகள் என்று வரும் பொழுது தடையாக இருக்கும் வரைமுறையை உடைத்து புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு கிட்டத்தட்ட 94 ஆண்டுகள் ஆகியுள்ளன. இங்கிலாந்தில் நடைபெற்ற அழகு போட்டியில் முதல் முறையாக ஒரு போட்டியாளர் மேக்அப் இல்லாமல் பங்கேற்றுள்ளார். மேக்கப் இல்லாமல் அழகி போட்டியில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்வி தோன்றலாம்.

Read More : மனிதரை நோக்கி சீறி பாயும் முதலை.! நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகும் பயங்கர வீடியோ.!

அவ்வாறு கேள்வி தோன்றும் அளவிற்கு அழகி போட்டி வரைமுறைகள் உலகம் முழுவதிலுமே உள்ளன! மிஸ் இங்கிலாந்து பட்டம் பெறக்கூடிய அழகிப்போட்டியில், போட்டியாளர்களில் ஒருவராக 20 வயதான மெலிசா ராஃப் என்ற பெண் பங்கேற்றுள்ளார். இவர் தெற்கு லண்டனில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவியாவார்.

மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற, இறுதி போட்டிக்குத் தகுதி பெறும் போட்டியாளர்கள் ச்டுரில் மெலிசாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் துளி கூட மேக்கப் பயன்படுத்தாமல் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் இயற்கையாகவே அழகு தான். எதற்கும் காஸ்மெட்டிக் பொருட்கள் என்றெல்லாம் பலரும் கூறுவார்கள்! அது உண்மைதான் என்பதை மெலிசா நிரூபித்திருக்கிறார். லண்டனில் அரசியல் இளங்கலை படிப்பைப் படித்து வரும் மெலிசா, அழகிப் போட்டிக்காக ஸ்டண்ட் அடிக்கிறாரோ என்ற சந்தேகம் எழலாம்.

ஆனால் மெலிசா மேக்கப் மற்றும் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவது பற்றி வித்தியாசமான கண்ணோட்டத்தைத்தான் கொண்டுள்ளார். எப்பொழுதாவது முக்கியமான நிகழ்வுகளின் போதும் மஸ்காரா லிப்ஸ்டிக் போன்றவற்றை அணியலாமே எதற்கு எப்பொழுதுமே பெண்கள் இவற்றையெல்லாம் போட்டுக் கொள்ள வேண்டும், அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா அல்லது எழுதப்படாத விதி இருக்கிறதா என்று பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களுக்கு இயற்கையாக என்ன குறை என்பதை வலியுறுத்தும் வகையில் மிஸ் இங்கிலாந்து போட்டியில் மேக்அப் இல்லாமல் கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றுள்ளார்.




 




View this post on Instagram





 

A post shared by Mel❤️ (@melisaraouf)



இறுதிப் போட்டிக்குத் தேர்வான மெலிசா, ‘பெண்கள் சமூகத்தில் அவர்கள் மீது திணிக்கப்படும் அழுத்தத்தால், எந்த வயதாக இருந்தாலும் மேக்கப் அணிந்து கொள்கிறார்கள். தங்களின் தோற்றம், சரும நிறம் ஆகியவற்றைப் பற்றி திருப்தி அடைந்தால், யாருமே மேக்கப் அணியத் தேவையில்லை.’ என்று கூறியவர், இளம் வயதில் மேக்கப் அணிந்ததாகவும், அதனால் மிகவும் அசௌகரியமாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

top videos

    இதுவரை எங்குமே நடக்காத அளவுக்கு, அழகிப் போட்டிகளின் கண்ணோட்டத்தையே மாற்றியுள்ளார் மெலிசா. மேலும், வெளிப்படையாக பேசியதும் பலரையும் ஈர்த்துள்ளது.

    First published:

    Tags: Trending, Viral