ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ரெஸ்டாரண்டில் தனியாக பிறந்தநாள் கொண்டாடிய பெண் - வாழ்த்து மழை பொழிந்த சக மனிதர்கள்..வைரலாகும் வீடியோ..

ரெஸ்டாரண்டில் தனியாக பிறந்தநாள் கொண்டாடிய பெண் - வாழ்த்து மழை பொழிந்த சக மனிதர்கள்..வைரலாகும் வீடியோ..

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | வயதான பெண் ஒருவர் தனக்குத்தானே பிறந்தநாள் கொண்டாடிக்கொண்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வாழ்க்கையில் எதை மறந்தாளும், மறக்கா விட்டாலும் நம்முடைய பிறந்தநாளை நாம் மறப்பதில்லை. வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள், கவலைகளை நாம் எதிர்கொண்டு வந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை வருகின்ற இந்த பிறந்தநாளில் நம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பிறந்தநாள் நெருங்குகின்ற வேளையில் இந்த முறை அதை எப்படி கொண்டாடுவது என்று நாம் தீர்மானித்து விடுவோம்.

  குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், சக ஊழியர்கள் எனப் பலரும் நம்முடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கெடுத்து கொள்வார்கள். குறிப்பாக, சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் முன், பின் தெரியாத நண்பர்கள் கூட நமக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

  அதே சமயம், வாழ்க்கை நமக்கு அளிக்கும் முரண்பாடான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். உலகம் இயந்திரமாக இயங்கி வரும் நிலையில், சில சமயம் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்முடைய பிறந்தநாளை மறந்து விடுவார்கள் அல்லது நம்மோடு அன்றைய நாளில் இணைய முடியாத சூழலில், வெகு தொலைவில் வசித்து வருவார்கள்.

  Read More : வீட்டுக் கதவைத் திறந்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி - வரவேற்கக் காத்திருந்த சிறுத்தை குட்டி!

  அத்தகைய நிலையில், பிறந்தநாள் என்றாலும் ஒருவித வெறுமை உணர்வு நம் மனதை ஆக்கிரமித்துக் கொள்வதை நாம் உணர முடியும். தனியொரு ஆளாய் பிறந்தநாள் கொண்டாடி என்ன செய்யப் போகிறோம் என்ற சலிப்பு கூட நமக்கு ஏற்பட்டு விடக் கூடும்.

  வெளிநாட்டைச் சேர்ந்த வயதான பெண் ஒருவருக்கு இதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு நெருங்கிய உறவுகள் உடன் இல்லை போலத் தெரிகிறது. ஆனால், மனம் தளர்ந்து விடாமல் ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு சென்ற அந்தப் பெண், பிறந்தநாள் கேக் வாங்கி, பிறந்தநாளை தனியாக கொண்டாட தொடங்கினார். மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து, தனக்கு தானே கைகளை தட்டி, பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை பாடத் தொடங்கினார்.

  வாழ்த்து மழை பொழிந்த சக மனிதர்கள்

  இந்தப் பெண் தனியாக பிறந்தநாள் கொண்டாடுவதைக் கண்ட, ரெஸ்டாரண்டில் இருந்த சக மனிதர்கள் அவருடைய கொண்டாட்டத்தில் தாமாக முன்வந்து இணைந்து கொண்டனர். எல்லோரும் கைகளை தட்டி பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை பாடினர். அத்துடன், ஒவ்வொருவராக வந்து அன்பாக அரவணைத்து முத்த மழை பொழிந்தனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by memes comedy (@ghantaa)  இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதுவரையிலும் சுமார் 1.36 லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். மேலும் நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய அன்பான வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இவ்வுலகில் அன்புதான் எல்லாமே என்பதை உணர்ந்து, பிறந்தநாள் கொண்டாடிய அந்தப் பெண்ணுக்கு வாழ்த்துகளை தெரிவித்த சக மனிதர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Video, Viral