• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பிறந்தநாள் கேக் மூலம் சர்பிரைஸ் கொடுத்த சிறுமி - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிறந்தநாள் கேக் மூலம் சர்பிரைஸ் கொடுத்த சிறுமி - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சர்ப்ரைஸ் கொடுத்த சிறுமி

சர்ப்ரைஸ் கொடுத்த சிறுமி

மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தன்னுடைய பிறந்தநாளையும் தெரிவித்துள்ளார்

  • Share this:
சிகாகோவில் தனிமையில் வசித்து வருபவரின் பிறந்தநாளுக்கு, சிறுமி ஒருவர் சர்பிரைஸாக கேக் ஒன்றை தயாரித்து கொடுத்து அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் சிறுமியின் பக்கத்து வீட்டில் ஒருவர் நீண்ட நாட்களாக வசித்து வருகிறார். அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய அந்த சிறுமி, கேக் ஒன்றை தயாரித்து அதனை அவரது வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார். அப்போது, தன்னுடைய வாழ்க்கையை தனியாக கழிக்கும் அந்த நபர், நீண்ட நாட்களாக தனிமையில் வசித்து வருவதையும், ஆறுதல் தெரிவிக்கக் கூட நபர்கள் இல்லை என்ற தொனியில் பேசியுள்ளார். மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தன்னுடைய பிறந்தநாளையும் தெரிவித்துள்ளார். அதனை குறித்து வைத்துக் கொண்ட சிறுமி, பிறந்த நாளன்று அவருக்கு சர்பிரைஸ் கொடுக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

பக்கத்து வீட்டுக்காரரின் பிறந்தநாளன்று காலை எழுந்த சிறுமி, புதிய கேக் தயாரிப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்துவைத்துவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டார். மாலை வீடு திரும்பியதும், தன்னுடைய விருப்பம்போல் புதிய கேக் ஒன்றை தயாரித்து பக்கத்து வீட்டுக்காரருக்கு பரிசாக கொடுக்க சென்றுள்ளார். காலிங் பெல் அடித்தவுடன் கதவை திறந்து பார்த்த அவர், பிறந்தநாள் கேக்கை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். ஆனந்த கண்ணீருடன் சிறுமியை வரவேற்ற அவர், பிறந்தநாள் அன்று சர்பிரைஸ் கொடுத்த சிறுமியின் மீது அன்பு மழை பொழிந்துள்ளார்.

இந்த வீடியோவை சிறுமியின் தந்தையும் பிரபல உணவு பிளாக்கருமான ஜெனி தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருடைய மகள் தன்யா, இந்த நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளார். இதுகுறித்து பேசிய தன்யா, " அண்மையில் என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினேன். அப்போது கேக் ஒன்றை தயாரித்து நானும் எனது தந்தையும், பக்கத்துவீட்டுக்காரருக்கு கொடுக்க சென்றோம். மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்ற அவர், எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர், நீண்ட நாட்களாக தனியாக வசித்து வருவதை பகிர்ந்து கொண்ட அவர், இடையில் அவருடைய பிறந்தநாள் தேதியை கூறினார். அப்போதே, அவருக்கு பிறந்தநாளன்று கேக் தயாரித்துக் கொடுத்து வாழ்த்த வேண்டும் என எண்ணினேன். நான் நினைத்ததுபோலவே அவருடைய பிறந்நாளும் வந்தது. நான் மறக்கவில்லை. காலையில் பள்ளி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியதும், வேகவேகமாக கேக் ஒன்றை தயாரித்து, அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். மிகவும் மிகழ்ச்சியடைந்த அவர், என்னை அன்பாக வரவேற்றார்" என கூறினார்.

சிறுமியின் இந்த செயல் நெட்டிசன்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தன்யாவின் தந்தை ஜெனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நான் உன்னை மகளாக பெற்றெடுத்ததில் பெருமை கொள்கிறேன் செல்லமே" என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: