புன்னகையுடன் சுறுசுறுப்பாக சப்பாத்தி தயார் செய்யும் பெண்.. ரசிக்க வைக்கும் வீடியோ!

வீடியோ காட்சி

ஒரு இளம் பெண் உணவுக்கு ரொட்டிகளை தயாரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

  • Share this:
ஒரு சாதாரண மனிதனை கூட ஒரே இரவில் பிரபலமாக மாற்றும் சக்தி சமூக ஊடகங்களுக்கு உண்டு. அந்த வகையில் எண்ணற்ற மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் இப்போது செலிப்ரேட்டியாக வளம் வருகின்றனர். உதாரணத்திற்கு, பாகிஸ்தானில் கடையில் டீ போட்டுக்கொண்டிருந்த அர்ஷத் கான் என்பவரின் ஒரே ஒரு புகைப்படம் ஆன்லைனில் வைரலாகி, இணையத்தில் ஒரு கலக்கு கலக்கியது நினைவில் இருக்கிறதா? இவ்வளவு அழகான டீ மாஸ்டரா என்று சொல்லும் அளவுக்கு வைரலானது. அந்த போட்டோ புகைப்படக் கலைஞர் ஜியா அலி என்பவரால் எடுக்கப்பட்டது. அதில் அர்ஷத் நீல நிற குர்தா அணிந்திருப்பதைக் காட்டியது.

அதைப்போல இப்போது, ஒரு இளம் பெண் உணவுக்கு ரொட்டிகளை தயாரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இளஞ்சிவப்பு நிற உடை அணிந்திருக்கும் பெண் ரொட்டி தயாரிக்க மாவை சப்பாத்தி கட்டையில் தேய்த்து பின்னர் அதனை தனது கைகளால் சுழற்றி கொண்டிருந்தார். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்கிறார்கள் என்பது தெரியாமல் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், மேலே நிமிர்ந்த போது, தான் கேமராவில் பதிவு செய்யப்படுவதை உணர்ந்திருக்கிறார். பின்னர் கேமராவை பார்த்து புன்னகைத்தபடியே மாவினை திரட்டி வைத்துக்கொண்டிருந்தார். 
View this post on Instagram

 

A post shared by jasmeen saini (@jasmeen_sainii)


வீடியோவில் உள்ள இளம் பெண் யார் அல்லது அந்த கிளிப் எங்கே படமாக்கப்பட்டது என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

இந்த வீடியோ ஆரம்பத்தில் @Ekiya5 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டது. இது பெண்ணுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. மேலும் ரோட்டிஸ் மற்றும் பிற உணவுப் பொருட்களை தயாரிக்கும் அந்த இளம் பெண்ணின் பல வீடியோக்களை இந்தப் இன்ஸ்டா பேஜ் வெளியிட்டுள்ளது. ஆனால் அவை பெரிதும் பிரபலமடையவில்லை.

இந்த வீடியோ பின்னர் மற்றொரு இன்ஸ்டாகிராம் யுசரால் பகிரப்பட்டது. பின்னர் அந்த பதிவு சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. அந்த பெண்ணின் எளிமை மற்றும் புன்னகையால் ஈர்க்கப்பட்ட நெட்டிசன்கள் வீடியோவை பிரபலமாகியுள்ளனர். மேலும் பலர் தங்களது கருத்துக்களால் கமெண்ட் செக்ஷனை நிரப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் ஒரு யூசர், சினிமா ஹீரோயின் போல இருப்பதாக பாராட்டினார். மற்றொரு நபரோ " அது அழகு இல்லை. இது தூய்மையானது." என்று கூறியிருந்தார். மேலும் ஒருவர், "அவள் மிகவும் அபிமானமானவள்" என்று கூறினார். பில்டர்ஸ் இல்லாத இயற்கை அழகு என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதுபோன்ற பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது மிக சாதாரணமாகியுள்ளது. இன்னும் சிலர் தங்கள் வீடியோ வைரலாக வேண்டும் என்றே எதையாவது வித்தியாசமாக செய்வதும் உண்டு.

Published by:Vijay R
First published: