முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இந்தியாவின் ஸ்லீப் சாம்பியன் : தினமும் 9 மணி நேரம் தூங்கி லட்ச கணக்கில் பரிச வென்ற பெண்

இந்தியாவின் ஸ்லீப் சாம்பியன் : தினமும் 9 மணி நேரம் தூங்கி லட்ச கணக்கில் பரிச வென்ற பெண்

 திரிபர்ணா

திரிபர்ணா

9 மணி நேரம் தூங்கிய பெண்ணுக்கு பரிசாக கிடைத்த ரூ.6 லட்சம்..

  • 2-MIN READ
  • Last Updated :
  • West Bengal, India

நம்மில் பெரும்பாலானோர் தினசரி 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளோம். 6 மணி நேரத்திற்கும் குறைவாக சிலர் தூங்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க குறைந்தது 6 மணிநேரம் தூங்க பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள். ஆனால் தூங்குவதை திறமையாக கருத்தில் கொண்டு போட்டி வைத்தால் எத்தனை பேரால் வெற்றி பெற பெற முடியும்.!! கொல்கத்தாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் தினமும் 9 மணி நேரம் தூங்கி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை மூலம் இவர் சுமார் ரூ.6 லட்சம் வரை பரிசாக பெற்றுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியின் ஸ்ரீராம்பூரை சேர்ந்தவர் 26 வயதான திரிபர்ணா. இவர் அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட Finest Sleeper எனப்படும் யார் நன்றாக தூங்குகிறார்கள் என்பதற்கான போட்டியில் பங்கேற்றார். இவருடன் சேர்த்து முதலில் இந்த போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 லட்சம் பேர் ஆவர்.

இத்தனை லட்சம் பேரில் இருந்து மொத்தம் 15 போட்டியாளர்கள் மட்டுமே Finest Sleeper போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக இந்த 15 பேரில் 4 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். கடைசியில் நன்றாக உறங்குபவர் என்ற பட்டத்தை தட்டி சென்று ரூ.6 லட்சம் பரிசையும் பெற்றுள்ளார் திரிபர்ணா. Finest Sleeper டைட்டில் வென்ற பிறகு மீடியாக்களிடம் பேசிய திரிபர்ணா, இந்த வித்தியாசமான போட்டி பற்றி ​​ஆன்லைன் வெப்சைட் ஒன்றின் மூலம் தகவல் கிடைத்ததாக குறிப்பிட்டார்.

இந்திய அளவில் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் வெப்சைட் மூலமே தெரிந்து கொண்டதாக கூறினார். தங்களது தூங்கும் திறனை வெளிப்படுத்த முன் வந்த போட்டியாளர்களுக்கு மெத்தை மற்றும் ஸ்லீப் ட்ராக்கர் வழங்கப்பட்டதாக போட்டியில் வெற்றி பெற்றுள்ள திரிபர்ணா தெரிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்கள் திறனை நிரூபிக்க அதிகமாக தூங்க வேண்டியிருந்தது.

also read : ஜிம்மில் தலைகீழாக சிக்கிய பெண்... சரியான நேரத்தில் உதவிய ஸ்மார்ட் வாட்ச் - வைரல் வீடியோ

போட்டியில் வெற்றி பெற திரிபர்ணா தொடர்ந்து 100 நாட்கள் 9 மணி நேரம் இடைவிடாமல் தூங்கி இருக்கிறார். தனது சமகாலத்தவர்கள் நால்வரை இறுதி போட்டியில் வீழ்த்தி லைவ் ஸ்லீப்-ஆஃப் போட்டியில் வென்றுள்ளார் திரிபர்ணா. இந்த பட்டத்தை வென்றதை அடுத்து தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான 6 காசோலைகளை (மொத்தம் ரூ.6 லட்சம்) பரிசும் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். இந்தியாவின் ஸ்லீப் சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ள திரிபர்ணா, வாழ்க்கையில் கடினமாக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தூக்கம் மிக அவசியம் என வலியுறுத்தி உள்ளார்.

பணம் சம்பாதிக்க கடினமாக உழைப்பது அவசியம் என்றாலும், மன அமைதி மற்றும் வெற்றிக்கு தினசரி 8 மணிநேர தூக்கம் முக்கியமான ஒன்று என அனைவரும் உணர வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். போட்டியாளர்களின் தூக்க திறன் மதிப்பெண்ணை தீர்மானிக்க அவர்கள் தூங்கும் காலம், விழித்திருக்கும் நேரம், லேசான தூக்கம் மற்றும் ஆழ்ந்த உறக்கம் போன்றவற்றை மானிட்டர் செய்து கண்காணிக்கப்பட்டதாக போட்டியை நடத்திய Wakefit.co நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

First published: