Home /News /trend /

எப்படி முதல்வர் ஆவது? மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவிடம் கேட்ட சிறுமி

எப்படி முதல்வர் ஆவது? மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவிடம் கேட்ட சிறுமி

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம் உங்களைப் போல் எப்படி முதல்வர் ஆவது எனச் சிறுமி கேட்ட வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    அன்னதா தம்ரே என்ற சிறுமி, நேற்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் உரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அந்த சிறுமி, “அஸ்ஸாமில் வெள்ளம் வரும் போது, நீங்கள் அங்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தீர்கள். அதே போல நானும் வெள்ளத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தால், முதல்வராக முடியுமா?” எனக் கேட்டார்.

    இதற்கு மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே சிரித்துக்கொண்டே, “நீங்கள் நிச்சயம் ஆக முடியும். இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம்” எனக் கூறினார்.

    உடனே அந்த சிறுமி, “இந்த வருடத் தீபாவளிக்கு என்னை கவுகாத்தி அழைத்துச் செல்கிறீர்களா?” என்று கேட்க, “நிச்சயம் போகலாம்” என்று பதிலளித்தார்.

    மேலும், “கவுகாத்தியில் உள்ள காமகயா கோவிலை நீங்கள் பார்க்க வேண்டுமா” என்று ஷிண்டே கேட்க, “ஆம்” எனப் பதிலளித்தார் அன்னதா. ஷிண்டே அந்த அறையில் உள்ளவர்களைப் பார்த்து, “இந்த சிறுமி மிகவும் புத்திசாலியாக உள்ளார்” எனக் கூறினார்.

    சென்ற மாதம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 எம்.எல்.ஏகள் அன்றைய முதல்வர் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து கவுகாத்தியில் முகாமிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.



    இதன் பிறகு கடந்த ஜூன் 30ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவி ஏற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Maharashtra, Viral Video

    அடுத்த செய்தி