Home /News /trend /

Google Maps-இல் கண்டறியப்பட்ட மிகப்பெரிய பாம்பின் எலும்புக் கூடு - வைரல் போட்டோ

Google Maps-இல் கண்டறியப்பட்ட மிகப்பெரிய பாம்பின் எலும்புக் கூடு - வைரல் போட்டோ

Giant Snake Skeleton

Giant Snake Skeleton

Giant Snake Skeleton | கூகுள் மேப்ஸ் மூலம் உலகை ஆராய்வது பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். இதன் மூலம் சில வித்தியாசமான, அற்புதமான மற்றும் அசத்தலான விஷயங்களைக் கண்டறிய முடியும். இந்நிலையில், பிரான்சில் ஒரு பெரிய 'பாம்பு எலும்புக்கூட்டை' கண்டறிவது பற்றிய வீடியோ ஒன்று வேறு எதிலும் இல்லாத அளவிற்கு ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
இன்டர்நெட்டில் பல விதமான வினோத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். இதில் உண்மையானவை சில இருக்க கூடும். அதே போன்று போலியானவையும் இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக சிலவற்றை பார்க்கும்போது இது நிஜமானது தான் என்று தோன்றும். ஆனால், அது அப்படி இருக்காது. அந்த வகையில் நாம் எதிர்பாராத வீடியோக்களும், புகைப்படங்களும் கூட பல சமயங்களில் உண்மையான ஒன்றாக இருக்க கூடும். இது போன்ற ஒரு வினோத புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

கூகுள் மேப்ஸ் மூலம் உலகை ஆராய்வது பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். இதன் மூலம் சில வித்தியாசமான, அற்புதமான மற்றும் அசத்தலான விஷயங்களைக் கண்டறிய முடியும். இந்நிலையில், பிரான்சில் ஒரு பெரிய 'பாம்பு எலும்புக்கூட்டை' கண்டறிவது பற்றிய வீடியோ ஒன்று வேறு எதிலும் இல்லாத அளவிற்கு ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. @googlemapsfun என்கிற டிக் டாக் அக்கவுண்ட்டில், கூகுள் வரைபடத்தை ஆராயும் போது அவர்கள் கண்டறிந்த விஷயங்களை வீடியோக்களாக பகிர்ந்து வருகின்றனர்.

அதன்படி மார்ச் 24 ஆம் தேதி, பிரான்ஸ் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெரிய பாம்பு போன்ற பொருளின் வீடியோவை இந்த அக்கவுண்ட்டில் உள்ளவர் பகிர்ந்துள்ளார்.
"கூகுள் எர்த்தில் வைக்கப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் மூலம் மட்டுமே இந்த மாபெரும் விஷயத்தை நம்மால் பார்க்க முடியும்" என்று அந்த வீடியோவில் கேப்ஷனாக குறிப்பிட்டு இருந்தனர். "இது ஒரு ராட்சத பாம்பு என்று பார்ப்பவர்கள் நம்புகிறார்கள்.

இது 30 மீட்டர் நீளம் கொண்ட ஒன்றாக உள்ளது. இதற்கு முன் பிடிபட்ட எந்தப் பாம்பையும் விடவும் இது பெரியது." என்றும் அதில் கூறி இருந்தனர். இந்த பாம்பு எலும்புக்கூடானது அழிந்துபோன டைட்டனோபோவா என்கிற மிகப் பெரிய பாம்புகளின் இனமாக இருக்கலாம் என்றும் இதில் தெரிவித்து இருந்தனர்.



 

இந்த வீடியோவை சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் இது தற்போது வைரலாகி உள்ளது. இந்த வைரல் வீடியோ பற்றிய விசாரணையில், 'பாம்பு எலும்புக்கூடு' உண்மையில் "Le Serpent d'Ocean என்று அழைக்கப்படும் ஒரு பெரிய, உலோக சிற்பம்" என்று கண்டறியப்பட்டது.

Also Read : ஆத்தி எத்தா தண்டி.. ராஜ நாகம் மற்றொரு பாம்பை சாப்பிடும் அரிய வீடியோ!

இந்த சிற்பம் பிரான்சின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. மேலும் இது 425 அடி உயரத்தை கொண்டதாக இருக்கிறது. Estuaire என்கிற கலைக் கண்காட்சியின் ஒரு அங்கமாக Le Serpent d'Ocean என்கிற இந்த கலைப்படைப்பு 2012 ஆண்டில் வெளியிடப்பட்டது. இது சீன-பிரெஞ்சு கலைஞர் ஹுவாங் யோங் பிங் என்பவரால் உருவாக்கப்பட்டது என்று அட்லஸ் அப்ஸ்குரா தெரிவித்துள்ளார். எனவே இந்த வைரல் வீடியோவில் உள்ள நீளமான பாம்பு போன்ற தோற்றமானது நிஜ பாம்பு கிடையாது. அது ஒரு வகை கலைப்படைப்பு என்பது இறுதியில் உறுதியாகி விட்டது.
Published by:Selvi M
First published:

Tags: Google map, Snake, Trending

அடுத்த செய்தி