அட .. அட.. என்ன ஒரு அறிவு... கப்பலை திருப்ப படாத பாடு படும் இணையவாசிகள்!

அட .. அட.. என்ன ஒரு அறிவு... கப்பலை திருப்ப படாத பாடு படும் இணையவாசிகள்!

கப்பலை திருப்ப படாத பாடு படும் இணையவாசிகள் !

எகிப்து அருகே சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் பிரமாண்ட சரக்கு கப்பலை வைத்து இணையவாசிகள் நகைச்சுவையாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கூகுள் மேப் பார்த்து வந்ததனால் கப்பல் இந்த நிலைக்கு சென்றிருக்கும் எனவும், கப்பலின் அடியில் நாய் குழி தோண்டி கப்பலை வெளியே எடுப்பது போலவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

 • Share this:
  எகிப்து அருகே சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் பிரமாண்ட சரக்கு கப்பல் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மிதக்க தொடங்கியுள்ளது.

  20,000 கண்டெய்னர்களுடன் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான எவர் கிவன் சரக்கு கப்பல் சீனாவில் இருந்து மலேசியா வழியாக நெதர்லாந்துக்கு சென்று கொண்டிருந்தது. கடந்த 23ஆம் தேதி எகிப்தை ஒட்டியுள்ள சூயஸ் கால்வாயை கடக்கும் போது ஏற்பட்ட புழுதி காற்றில் சிக்கி கால்வாயை மறித்தபடி தரைதட்டி நின்றது.

  இதனால் சர்வதேச சரக்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் கப்பலை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. கப்பலின் அடிப்பகுதியில் உள்ள மணல் பகுதியை தோண்டி கப்பலை வெளியே இழுப்பதற்காக 12 இழுவை படகுகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் 2 இழுவை கப்பல்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

  கப்பல் தற்போது 9 டிகிரி வலது புறத்தில் நகர்ந்து மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் கப்பலை மீட்க எவ்வளவு நாட்களாகும் என தெரியவில்லை என்று சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இதனிடையே கப்பலை எப்படி எல்லாம் திசை திருப்பலாம் என இணையவாசிகள் இணையத்தில் பதிவிடும் அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டுஉள்ளது. ஒருவர் போட்டோ ஷாப் பயன்படுத்தி கப்பலை இப்படி நகர்த்தலாமே என வீடியோ வெளியிட்டுள்ளார்.

   

     மற்றும் ஒருவர் அவ்வளவு பெரிய கப்பலை நகர்த்த நாடாகும் முயற்சி இப்படித் தான் உள்ளது என வீடியோ ஒன்றை நகைச்சுவையாக வெளியிட்டுள்ளார்.

   

      

  ஒருவர் ஒரு படி மேலே போய் வடிவேலு காமெடியை வைத்து பங்கமாக கலாய்த்துள்ளார்.

   

      

  கப்பலை நகர்த்த கப்பலுக்கு அடியில் நாய், மண் தோண்டுவதை போன்ற வீடியோவை வெளியிட்டு பலரும் நகைத்து வருகின்றனர்.

   

      

      

  கப்பலுக்கு கூகுள் மேப் வழிகாட்டியதால் தான் இவ்விதம் நின்றிருக்கும் என மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

   
  Published by:Sankaravadivoo G
  First published: