• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • panda: 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2 குட்டிகள் ஈன்ற பாண்டா - பூங்காவினர் மகிழ்ச்சி!

panda: 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2 குட்டிகள் ஈன்ற பாண்டா - பூங்காவினர் மகிழ்ச்சி!

2 குட்டிகள் ஈன்ற பாண்டா

2 குட்டிகள் ஈன்ற பாண்டா

பூங்காவில் புதிய உறுப்பினர்களாக இணைந்திருக்கும் இரண்டு பாண்டாக்களுக்கும் விரைவில் பெயர் சூட்டப்படும்.

  • Share this:
ஜப்பானில் யுனோ மிருகாட்சி பூங்காவில் இருக்கும் பெரிய பாண்டா 4 ஆண்டுகளுக்கு பிறகு 2 பாண்டாக்களை ஈன்றிருப்பது, பூங்கா பாதுகாப்பாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் யுனோ மிருக காட்சி பூங்கா அமைந்துள்ளது. அங்கு ஷின்ஷின் பாண்டா பத்திரமாக வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தாய்மை அடைந்திருந்த அந்த பெண் பாண்டா, சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக 2 பாண்டா குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த தகவல் பூங்காவின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. காலை ஒரு மணிக்கு ஒரு பாண்டாவை ஈன்ற ஷின் ஷின் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு காலை 2.30 மணி அளவில் இரண்டாவது பாண்டாவை ஈன்றுள்ளது. பாண்டாக்களின் பாலினம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூங்காவில் புதிய உறுப்பினர்களாக இணைந்திருக்கும் இரண்டு பாண்டாக்களுக்கும் விரைவில் பெயர் சூட்டப்படும் என பூங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர். தாய் பாண்டா ஷின் ஷின் மற்றும் புதிதாக பூங்காவில் இணைந்துள்ள 2 புதிய குட்டி பாண்டாக்களை பூங்கா ஊழியர்கள் இரவு பகலாக பாதுகாப்பாக கண்காணித்து வருவதாக யூனோ பூங்கா நிர்வாகம் இணையத்தில் குறிப்பிட்டுள்ளது. புதிய பாண்டாக்களின் புகைப்படம் ஒன்றும் பூங்காவின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், குட்டி பாண்டாவின் எடையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குட்டி பாண்டா 124 கிராம் எடையுடன் உள்ளது. மற்றொரு குட்டி பாண்டாவின் எடையை நிர்வாகம் கூறவில்லை. தாய்மை அடைந்திருக்கும் பெரிய பாண்டா ஷின் ஷின் சீனாவில் வளர்ந்து வந்துள்ளது. வோலாங்கில் உள்ள ஜெயண்ட் பாண்டா பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிறந்த அந்தப் பாண்டா 10 ஆண்டுகளுக்கு முன்பு யுனோ மிருக காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதுடன் ஆண் பாண்டாவான ரியும் வந்துள்ளது. இந்த இணையருக்கு 2017 ஆம் ஆண்டு பெண் பாண்டா ஒன்று பிறந்தது. அதற்கு சியாங் சியாங் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மக்களின் பார்வைக்கு புதிய பாண்டாக்களை காண்பிப்பது எப்போது என்ற தகவல் தெரியவில்லை. ஏனென்றால் கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு மிருக காட்சி சாலை மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மக்களின் பார்வைக்கும் பாண்டாக்கள் காண்பிக்கப்படவில்லை. தொற்று குறைந்ததால் ஜூன் 4 ஆம் தேதி மிருக்காட்சி பூங்கா திறக்கப்பட்டாலும் ஷின்ஷின் பாண்டா குட்டியை ஈன்றிருப்பதால் அதற்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also read... Burger: பர்கர்ல சிக்கன் ஏன் இவ்வளவு கம்மியா இருக்கு? - ஃபோட்டோ பகிர்ந்த கஸ்டமரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

பொதுவாக பெண் பாண்டாக்கள் வெப்பமான பகுதிக்கு செல்வதை விரும்புவதில்லை. இதுபோன்ற மிருகக்காட்சி சாலையில் இருக்கும் பாண்டாக்கள் இனப்பெருக்கும் அடைவது அரிதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பம் தரித்து ஷின்ஷின் 2 குட்டிகளை ஈன்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஜப்பான் அமைச்சர் கட்சுனோபு கடோ தெரிவித்துள்ளார். தற்போது பாண்டாக்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்த்திருப்பதாக கூறிய அவர், தங்களால் முடிந்தளவுக்கு இரவும் பகலும் பாண்டாக்களை பத்திரமாக பாதுகாப்போம் எனக் கூறியுள்ளார். இனிவரும் காலங்களில் யுனோ பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: