ஒரு எலி அளவிலான ராட்சத மர அந்துப்பூச்சி - ஆஸ்திரேலிய பள்ளியில் கண்டுபிடிப்பு!

ராட்சத மர அந்துப்பூச்சி - ஆஸ்திரேலிய

ராட்சத அந்துப்பூச்சியை மனிதர்களால் அரிதாக எப்போதாவது தான் காண முடியும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆஸ்திரேலிய நாட்டில் மிகப்பெரிய ராட்சத அளவிலான மர அந்துப்பூச்சி (Wood Moth) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்துப்பூச்சியானது விட்டில் பூச்சி என்றும் அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் இந்த ராட்சத அந்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த பள்ளிக்கும், குழந்தைகளுக்கும் ஒரு மிகப்பெரிய பெரிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. ஏனெனில் ராட்சத அந்துப்பூச்சியை மனிதர்களால் அரிதாக எப்போதாவது தான் காண முடியும்.

ஆஸ்திரேலியாவில் ஒரு பள்ளியில் புதிய வகுப்பறைகளை நிர்மாணித்த பில்டர்களால் இந்த மிகப்பெரிய அந்துப்பூச்சியை கண்டறியப்பட்டுள்ளது. இது அளவில் மிகப் பெரியதாக இருந்ததுடன் கனமான எடையிலும் இருந்துள்ளது. மேலும் அது பறக்க சிரமப்பட்டது. இந்த அந்துப்பூச்சி கிட்டத்தட்ட ஒரு எலியின் சைஸில்இருந்தது. தெற்கு குயின்ஸ்லாந்தின் ரெட்லேண்ட்ஸில் உள்ள மவுண்ட் காட்டன் ஸ்டேட் பள்ளியில் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த மாபெரும் மர அந்துப்பூச்சியை கண்டுபிடித்துள்ளனர்.

தகவல்களின் படி, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ராட்சத அந்துப்பூச்சி பெண் என்றும் அதன் இனங்களில் மிகப் பெரியது மற்றும் 30 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கிறது. குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் ராட்சத மர அந்துப்பூச்சி காணப்படுவதாக கூறப்படுகிறது. வனவிலங்கு நிபுணர்களின் கூற்றுப்படி, மாபெரும் மர அந்துப்பூச்சிகள் உலகிலேயே மிகவும் கனமானவை. அவை மனிதர்கள் கண்ணனுக்கு அரிதாகவே தென்படுகின்றன. பெரிய பூச்சிகளாக ஆன பின் சில நாட்கள் மட்டுமே இவை வாழ்கின்றன.

Also read... அண்டார்டிக்காவில் வேகமாக உருகும் பனிப்பாறைகள் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

இதை சிலர் நம்ப முடியாத நிகழ்வாக பார்க்கும் நிலையில், மவுண்ட் காட்டன் ஸ்டேட் பள்ளியின் பிரின்ஸிபாலான மீகன் ஸ்டீவர்ட் இதை " ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு- amazing find" என்று கூறி மகிழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுமார் 60 வகையான மர அந்துப்பூச்சிகள் இருப்பதாக கூறினார். பள்ளியின் புதிய கட்டிடம் மழைக்காடுகளின் விளிம்பில் அமைந்துள்ளது என்றும் கட்டுமானத்தின் போது இந்த ராட்சத சைஸ் மர அந்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பள்ளியின் முதல்வர் ஸ்டீவர்ட், ஏபிசி ரேடியோ பிரிஸ்பேனுக்கு அளித்த பெட்டியில் தகவல் தெரிவித்துள்ளார்.

தங்கள் பள்ளியின் ஊழியர்களும், மாணவர்களும் இதுவரை பள்ளியில் பலவிதமான விலங்குகளை இதற்கு முன் பார்த்துள்ளனர். ஆனால் இது மாதிரியான ராட்சத அந்துப்பூச்சியை பார்ப்பது அனைவருக்கும் இது தான் முதல் முறை என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டீவர்ட். மவுண்ட் காட்டன் ஸ்டேட் பள்ளியில் கட்டிட பணியில் இருந்த பில்டர்கள் அந்துப்பூச்சியை மீண்டும் காட்டுக்கு கொண்டு சென்று விடுவதற்கு முன்பு அதை புகைப்படம் எடுத்தனர்.


இந்நிலையில் மவுண்ட் காட்டன் ஸ்டேட் பள்ளி தனது பேஸ்புக் பக்கத்தில் வகுப்பறை கட்டுமானத்தின் போது தங்கள் பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் மர அந்துப்பூச்சியின் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளது. இந்த போஸ்ட் சமூக ஊடகங்களில் வைரலாகி நூற்றுக்கணக்கான லைக்குகள், கமெண்ட்டுகளை பெற்றுள்ளது. ஏராளமானோர் அந்த போஸ்டை ஷேர் செய்து வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: