Home /News /trend /

இனி நோ டென்ஷன்..ரேஷன் கடை பற்றிய விவரங்களை  வீட்டிலிருந்தபடியே தெரிந்துக்கொள்ளலாம்..வீடியோ விளக்கம்..

இனி நோ டென்ஷன்..ரேஷன் கடை பற்றிய விவரங்களை  வீட்டிலிருந்தபடியே தெரிந்துக்கொள்ளலாம்..வீடியோ விளக்கம்..

ரேஷன் கார்டு தகவல்

ரேஷன் கார்டு தகவல்

Ration Shop | தங்களது குடும்ப அட்டையில் பொருள்கள் வாங்காமலே, பொருள்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்பட்டால் புகார் அனுப்ப PDS107 என பதிவு செய்து 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ரேஷன் கடை திறந்திருக்கிறதா, நமக்கு வேண்டிய பொருட்கள் ரேஷன் கடையில் உள்ளதா போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே தெரிந்துக்கொள்ள இயலும்.

    அதற்கான சரியான குறியீட்டை 9773904050 என்ற எண்ணுக்கு (ration shop) குறுஞ்செய்தியாக தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்பவும்.

    நியாய விலைக் கடையில் உள்ள இருப்பினை அறிய, உங்கள் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள / பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசியிலிருந்து PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

    விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்..


    குறுஞ்செய்தி குறியீடு விளக்கம்

    PDS <இடைவெளி> 101 – நியாய விலைக் கடையில் உள்ள பொருள் விவரங்கள்
    PDS <இடைவெளி> 102 – நியாய விலைக் கடையின் நிலை (திறந்துள்ளது/மூடப்பட்டுள்ளது)
    PDS <இடைவெளி> 107 – கட்டண தொகை பற்றிய புகாருக்கு
    நியாய விலைக் கடையில் உள்ள இருப்பினை அறிய

     

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Ration Shop, Tamil Nadu

    அடுத்த செய்தி