முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / நாட்டின் குடிமகனுக்கு அடிபணிந்த ஆஸ்திரேலிய பிரதமர்... என்ன நடந்தது?

நாட்டின் குடிமகனுக்கு அடிபணிந்த ஆஸ்திரேலிய பிரதமர்... என்ன நடந்தது?

ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலிய பிரதமர்

  • Last Updated :

ஆஸ்திரேலியாவில் தனது வீட்டின் புல்தரையில் நின்ற பிரதமரை அங்கிருந்து வெளியேறச் சொன்ன நபருக்கு புன்முறுவலுடன் பிரதமர் ஸ்காட் மோரிஸன் பதிலளித்த விதம் காண்போரை வியக்க வைத்துள்ளது.

கூகாங் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்காட் மோரிஸன், கொரோனாவால் நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தனது வீட்டின் புல் தரையில் யாரோ நின்று கொண்டிருப்பதை கவனித்த அந்த வீட்டின் உரிமையாளர், சமீபத்தில் தான் அங்கு விதைகளை நட்டதாக தொலைவிலிருந்து கூறினார்.

மேலும் அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறும் கூறினார். இதனை அடுத்து ஸ்காட் மோரிஸன், சட்டென்று அங்கிருந்து நகர்ந்து நின்றதோடு அவருக்கு சிரித்தபடியே தம்ஸ் அப் காட்டி விட்டு தன் உரையைத் தொடர்ந்தார்.

Also read...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Also see...

top videos

    First published:

    Tags: Trending