சிக்கனுக்கு ஆசைப்பட்ட நாய்க்கு ஏற்பட்ட விபரீதம்...!

மாதிரி படம்

10 மாதங்களான ஜெர்மன் ஷெப்பர்டு என்ற நாய், 4 இன்ச் அளவு கொண்ட கெபாப் ஸ்டிக்கை அண்மையில் விழுங்கியுள்ளதை கண்ட நாயின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிக்கனுக்கு ஆசைப்பட்டு கெபாப் குச்சியை விழுங்கிய நாயை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

10 மாதங்களான ஜெர்மன் ஷெப்பர்டு என்ற நாய், 4 இன்ச் அளவு கொண்ட கெபாப் ஸ்டிக்கை அண்மையில் விழுங்கியுள்ளதை கண்ட நாயின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து கெபாப் ஸ்டிக் அடிவயிற்றில் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மூலம் அந்த ஸ்டிக்கை அகற்றி நாயை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

நார்தாம்டன் நகரில் ரிச்சார்டு டேவிட்சன் என்பவர் வசித்து வருகிறார். தனது வீட்டில் செல்லமாக ஜெர்மன் ஷெப்பர்டு நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். சுமார் 8 வாரங்களுக்கு முன்பு வீட்டின் பின்புறத்தில் குடும்பத்துடன் சிக்கன் சாப்பிட்ட அவர், கெபாப் குச்சியுடன் அதனை அங்கே போட்டுள்ளனர். அவர்களுடன் இருந்த ஜெர்மன் ஷெப்பர்டு, குச்சியைக் கவனிக்காமல், சிக்கன் மீது கொண்ட ஆசை காரணமாக நன்றாக சாப்பிட்டுள்ளது. அப்போது, அதில் இருந்த கெபாப் ஸ்டிக் நாயின் அடிவயிற்றில் சென்று சிக்கிக் கொண்டது. சில நாட்கள் நன்றாக இருந்த நாய், திடீரென நடக்க முடியாமல் அவதியுற்றுள்ளது.

இதனையடுத்து ரிச்சர்டு டேவிட்சன் அருகில் இருந்த அபிங்டன் பார்க் கால்நடை மருத்துவமனைக்கு ஜெர்மன் ஷெப்பர்டு நாயை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த கால்நடை மருத்துவரான ரிக்கார்டோ மைனெல்லி (Riccardo Minelli ) நாய்க்கு ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.

அதில், நாயின் அடிவயிற்றில் கெபாப் குச்சி சிக்கியிருந்ததை கண்டுபிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார். 8 வாரங்களுக்கும் மேலாக குச்சி நாயின் வயிற்றில் இருந்தாலும், முக்கிய உறுப்புகள் எதையும் பாதிக்கவில்லை.

Also read... செக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்டு ரூ.2.17 லட்சத்தை இழந்த நபர் - இணையக் கொள்ளை!

இது குறித்து பேசிய மருத்துவர் ரிக்கார்டோ மைனெல்லி, ஜெர்மன் ஷெப்பர்டு வயிற்றில் இருந்த 4 இன்ச் அளவிலான குச்சி பெரியது எனத் தெரிவித்தார். இதற்கு முன்னர் பல நாய்களுக்கு இதுபோன்ற பிரச்சனையில் சிகிச்சை அளித்திருப்பதாகவும், ஆனால் இந்த நாயின் வயிற்றில் இருந்தது போன்ற பெரிய குச்சியை பார்த்தது இல்லை என விளக்கினார்.

மேலும். நாய் நடக்க முடியாமல் இருந்ததற்கும், வயிற்றில் குச்சி சிக்கியிருந்தது காரணம் என்பதை தன்னால் முதலில் நம்ப முடியவில்லை எனத் தெரிவித்தார். காலில் வீக்கம் ஏற்பட்டதை தவிர்த்து வேறு எந்த அறிகுறியும் இல்லை எனவும், முக்கிய உறுப்புகளை பாதிக்காமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது என்றும் ரிக்கார்ட் மைனெல்லி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சிக்கன் போன்றவற்றை உண்ணும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் என நாயின் உரிமையாளருக்கு எச்சரிக்கை செய்ததாக மைனெல்லி தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: