பழைய சம்பள பாக்கி கேட்ட நபருக்கு கிரீஸ் தடவிய நாணயங்களை அனுப்பிய முதலாளி: வைரலாகும் வீடியோ!

கிரீஸ் தடவிய நாணயங்கள்

இந்த நாணயங்கள் ஃபிளாட்டன் வீட்டின் டிரைவ்வே பகுதியில் குவியல்களாக போடப்பட்டிருந்தது. மேலும் அந்த குவியல்கள் நடுவே இறுதி ஊதிய ரசீது கொண்ட ஒரு கடிதம் வைக்கப்பட்டிருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த நபர் சமீபத்தில் தனக்கு வந்த சம்பள பாக்கியை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். இவர் கடந்த நவம்பர் மாதம் தனது வேலையை விட்டு நின்றுள்ளார். மேலும், தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியான 915 டாலர்களையும் தாமதிக்காமல் தரவேண்டும் என்று தனது முன்னாள் முதலாளியிடன் கோரிக்கை வைத்து விட்டு வந்துள்ளார். ஆனால் தனக்கு வந்த தனது சம்பள பாக்கியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனதாக தெரிவித்துள்ளார். ஜார்ஜியா நாட்டை சேர்த்த அந்த நபரின் பெயர் ஆண்ட்ரியாஸ் ஃபிளாட்டன்.

இந்த மாத இறுதியில் தான் தனது முன்னாள் முதலாளியிடம் இருந்து சம்பள பாக்கி வந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அதுவும் கிரீஸ் தடவப்பட்ட 90,000 நாணயங்களாக வந்தது தான் கொடுமை. இந்த நாணயங்கள் ஃபிளாட்டன் வீட்டின் டிரைவ்வே பகுதியில் குவியல்களாக போடப்பட்டிருந்தது. மேலும் அந்த குவியல்கள் நடுவே இறுதி ஊதிய ரசீது கொண்ட ஒரு கடிதம் வைக்கப்பட்டிருந்தது. அதிலுருந்து தனது முந்தைய முதலாளிக்கு ஃபிளாட்டன் மீது எவ்வளவு கோபம் இருந்திருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து பேசிய ஃபிளாட்டன், "இது ஒரு குழந்தைத்தனமான விஷயம்" என்று விவரித்தார். இவர் பீச்ட்ரீ சிட்டியில் அமைந்துள்ள "ஏ ஓகே வாக்கர் ஆட்டோவொர்க்ஸ்" (A OK Walker Autoworks) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியில் இருந்து நீங்கியதாக ஃபிளாட்டன் கூறினார். மேலும் இறுதி மாத சம்பளத்தை பெறுவதில் சிரமம் இருந்ததாகவும், அந்த தொகையை பெற ஜார்ஜியா தொழிலாளர் துறைக்கு சென்று உதவி நாடியதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த மாத நடுப்பகுதியில், ஃபிளாட்டன் தனது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறும்போது, தனது டிரைவ்வே-யின் முடிவில் சில நாணயக் குவியலைக் கவனித்ததாகக் கூறினார். மேலும் நாணயங்கள் ஒருவித எண்ணெய் பொருளால் பூசப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது அவர் இரவு முழுவதும் கிரீஸ் பூசப்பட்ட நாணயங்களை சுத்தம் செய்வதில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் மேல் உள்ள கிரீஸை நீக்கினால் தான் அவற்றை பணமாக என்னால் மாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Also read... நாய்குட்டியிடம் 'ஐ லவ் யூ' சொன்ன வெள்ளை கிளி - வைரலாகும் வீடியோ!

சில நூறு நாணயங்களை சுத்தம் செய்ய அவருக்கு ஒன்றரை மணி நேரம் பிடித்தது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அவர் 90,000 நாணயங்களையும் சுத்தம் செய்தே ஆக வேண்டும். நான் பெற வேண்டிய எனது சம்பள பாக்கிக்காக நான் இன்னும் நிறைய வேலை செய்துள்ளதாக நினைக்கிறேன். மேலும் இது நிச்சயமாக நியாயமானதல்ல என்று ஃபிளாட்டன் கூறியுள்ளார். இந்த நிலையில் கடையின் உரிமையாளர் மைல்ஸ் வாக்கர் இது தொடர்பாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துடன் பேசும் போது, ஃபிளாட்டனின் வீட்டில் சில்லறைகளை யார் போட்டது என்பது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

"எனக்கு உண்மையில் நினைவில் இல்லை. அவர் எப்படி பெற்றார் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. அவர் சம்பள பாக்கியை பெற்றாரா? என்பது தான் முக்கியம்." என்று திமிராக பேசிவிட்டு சென்றுள்ளார். மேலும் தனது வீட்டில் கிடந்த கிரீஸ் நாணயங்கள் மற்றும் சம்பள ரசீது ஆகியவற்றை வீடியோவாக பதிவிட்ட ஃபிளாட்டனின் காதலி, ஒலிவியா ஆக்ஸ்லி, தனது காதலனின் கதை, மக்கள் தங்கள் முதலாளிகளால் மிகவும் மோசமாக நடத்தப்படுவது குறித்து வெளிச்சம் போட்டு காட்டுகிறது என நம்புவதாகக் கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: