Home /News /trend /

குட்டி தூங்குது... சத்தம் இல்லாம போங்க - வைரலாகும் தாய் யானையின் அரவணைப்பு வீடியோ

குட்டி தூங்குது... சத்தம் இல்லாம போங்க - வைரலாகும் தாய் யானையின் அரவணைப்பு வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை (sheldricktrust ) தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெற்று அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.

    யானை குட்டி ஒன்று நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கையில் தாய் யானை குட்டியின் அருகில் யாரும் வராதவாறு குட்டி யானை மீண்டும் கண் விழிக்கும் வரை காத்திருந்த செயல் இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.

    ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை (sheldricktrust ) தனது இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியானை ஒன்று தரையில் படுத்து அசந்து தூங்கிக்கொண்டிருக்கின்றது. இதனை பார்த்த தாய் யானை குட்டியின் அருகில் நின்று அதனை பாதுகாக்கின்றது.

    இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை (sheldricktrust ) யானைகள் எவ்வளவு கவனமாகவும் சிந்தனையுடனும் பணிவாக ஒருவரையொருவர் கவனித்துக் கொள்கின்றன எனவும் பதிவிட்டுள்ளனர்.இந்த பதிவு இரண்டு நாட்களுக்கு முன்னர் பகிரப்பட்டுள்ளது. இதுவரை 60,729 பேர் யானையின் இந்த செயலுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.




    இதேபோன்று சமீபத்தில் குட்டி யானை ஒன்று கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.



    இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா ( Susanta Nanda IFS ) ட்விட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Elephant, Trending, Viral Video

    அடுத்த செய்தி