ஆசியாவின் மிக பெரிய கோடீஸ்வரரான கெளதம் அதானியின் (Gautam Adani) சமீபத்திய LinkedIn போஸ்ட் நெட்டிசன்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்து உள்ளது. ஏனென்றால், நாட்டின் மிகப் பெரிய பணக்காரரும், அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனருமான கௌதம் அதானி, ChatGPT-க்கு தான் அடிமையாகிவிட்டதாக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது சக்திவாய்ந்த புதிய AI டூல் யூஸர்களுடன் இயல்பான உரையாடல்களை மேற்கொள்ளும் மற்றும் அவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனை கொண்டுள்ளது. இந்த டயலாக்-பேஸ்டு சாட்போட்டான ChatGPT மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனிடையே குறிப்பிட்ட சோஷியல் மீடியா போஸ்ட்டில், ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial intelligence) டெக்னலாஜி Chat GPT மற்றும் IT நிறுவனங்களைத் தாக்கும் மந்தநிலை உட்பட 2023-ல் வணிக உலகில் நிலவும் பல ட்ரெண்ட்ஸ்களை பற்றி அவர் பேசியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்போட் Chat GPT உடன் தான் இணைக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி கூறி இருக்கும் கௌதம் அதானி அதனை நகைச்சுவைகளை உருவாக்க, கட்டுரைகளை எழுத, வணிகத்தில் பலன்களை ஈட்ட எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். AI சாட்போட்டான Chat GPT மீதான தனது புதிய காதலை பற்றி பேசுகையில், ChatGPT இன் வெளியீடு பற்றி குறிப்பிட்ட தொழிலதிபர் AI கருவிகளின் ஜனநாயகமயமாக்கலில் AI கருவியான ChatGPT-யை அதன் வியக்க வைக்கும் திறன்கள் மற்றும் நகைச்சுவையான தோல்விகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ள தருணம் என பாராட்டி உள்ளார்.
மேலும், ChatGPT -ஐ பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து தான் அதற்கு அடிமையாகி விட்டதை இங்கே ஒப்பு கொள்வதகாவும் கோடீஸ்வரரான கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான OpenAI கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பொது மக்களுக்குக் கிடைக்க செய்த இந்த டூல், பெரிய ஆன்லைன் தரவு தொகுப்புகளில் பயிற்சிக்குப் பிறகு அசல் கட்டுரைகள், கதைகள், பாடல்கள் மற்றும் படங்களாக மாற்றுவது பற்றிய உரையாடல்களை தூண்டியது. நாம் எப்படி வாழ்கிறோம் மற்றும் வேலை செய்கிறோம் என்பதையும் இந்த டூல் தீவிரமாக மாற்ற முடியும் என்ற பேச்சை எழுப்பியுள்ளது.
எனினும் இந்த புதிய டூல் எழுத்தாளர்கள், டெவலப்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு வேலையில்லாமல் ஆக்கிவிடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. பிறர் மிக உற்சாகமாக இருக்கிறார்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் செய்ய வேண்டிய வேலைகளை அதிக செயல்திறனுடன் விரைவாக முடிக்க இது உதவும் என் நம்புகிறார்கள். அதானி தனது போஸ்ட்டில் இந்த ஜெனரேட்டிவ் AI மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், சிலிக்கான் சில்லுகளைப் போன்ற "அதே வாக்குறுதி மற்றும் ஆபத்து" அதற்கு உள்ளது என்றும் கூறினார். மேலும் அதானி தனது போஸ்ட்டில் ஜெனரேட்டிவ் AI, சிலிக்கான் சிப்ஸ்களை போலவே "அதே சாத்தியம் மற்றும் ஆபத்தை" கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலதிபர் அதானியின் கூற்றுப்படி, “கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு, சிப் டிசைன் மற்றும் பெரிய அளவிலான சிப் உற்பத்தியின் முன்னோடியாக அமெரிக்கா உலகின் பிற பகுதிகளை விட முன்னணியில் இருந்தது, இது பல கூட்டாளர் நாடுகள் மற்றும் இன்டெல் போன்ற தொழில்நுட்ப நிறுவன எழுச்சிக்கு வழி வகுத்தது. Generative AI துறையில் போட்டி விரைவில் "சிக்கலானதாகவும், நடந்து கொண்டிருக்கும் சிலிக்கான் சிப் போரைப் போல பின்னிப்பிணைந்ததாகவும் மாறும் என்று தான் கணிப்பதாக கூறி இருக்கிறார். இது தவிர 2021-ஆம் ஆண்டில் சீன ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அமெரிக்க ஆய்வாளர்களை விட 2 மடங்கு அதிகமான கல்வி கட்டுரைகளை வெளியிட்டதால், AI ரேஸில் அமெரிக்காவை விட சீனா முன்னணியில் உள்ளது என்று தான் நம்புவதாக அதானி கூறியிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology, Viral News