பச்சையாக உரித்த பூண்டைத் தண்ணீரை மட்டும் ஊற்றியதோடு அதில் ஐஸ் குச்சியைச் சொருகிப் பூண்டு ஐஸ்கிரீம் செய்கிறார் நெட்டிசன் ஒருவர். இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த இணைய வாசிகள் இது என்னடா கொடுமை என்பது போன்று வெறுப்புடன் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சமீப காலங்களாக விதவிதமான ரெசிபிகளை செய்து சோசியல் பகிர்ந்து வருகின்றனர் மக்கள். அதுவும் புதுவிதமாக இருந்தால் இணையத்தை சில நாள்கள் ஆக்கிரமிப்பதோடு நெட்டிசன்களின் பாராட்டுகளையும் பெற்றுவந்தது. ஆனால் அதற்கு மாறாக தற்போது இணையத்தில் வைரலாகும் பூண்டு ஐஸ்கிரீம் ரெசிபியைப் பார்த்த நெட்டிசன்கள் வெறுப்பாகியுள்ளனர். இதோடு அவர்களைப் பயமுறுத்தும் வினோதமான உணவு வகை பட்டியிலும் இடம் பிடிக்கலாம் எனக் கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள். அப்படி என்ன தான் அந்த வீடியோவில் இருந்தது? என நாமும் தெரிந்து கொள்வோம்.
Also Read : கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்... ராஷி கன்னா நியூ ஆல்பம்!
பூண்டு ஐஸ்கிரீம் செய்வதற்காக நெட்டிசன் ஒருவர், உரித்த 10க்கும் மேற்பட்ட பூண்டு பற்களை எடுத்துக் கொள்கிறார். பின்னர் பூண்டை ஒரு டம்ளரில் வைத்து தண்ணீர் ஊற்றியதோடு ஐஸ் குச்சிகளைச் சொருகி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து ஃபிரிட்ஜில் பல மணி நேரம் வைத்து எடுத்தவுடன் பூண்டு ஐஸ்கிரீம் ரெடியான பின்னர் அதனைச் சுவைப்பது போன்று தான் வீடியோ அமைந்திருந்தது.
View this post on Instagram
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில், இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், பூண்டை வைத்து சட்னி செய்யலாம், சப்ஜி கூடச் செய்யலாம்.. ஆனால் ஐஸ்கிரீம் செய்ய முடியுமா? பார்த்தாலே ஏதோ ஒரு மாதிரி உள்ளது எனக் கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு டிவிட்டர் பயனர் ஒருவர், இது முட்டாள் தனமாகச் செயல் என்றும், பூண்டு அனைவருக்கும் பிடிக்கும்.. ஆனால் அதற்கென்று இப்படியா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும் பூண்டில் ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது.. அதற்கென அதிகளவில் சாப்பிடுவது உடல் நலத்தைப் பாதிக்கும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த வீடியோவிற்கு இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த ஐஸ்கீரிமை நீங்கள் சுவைக்க வேண்டும் என்றால் கொஞ்சம் ஃடிரை பண்ணிப்பாருங்கள் எனவும் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நாம் சமைக்கும் போது உணவுகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் , பூண்டில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. ஆனால் அதற்கென்று அளவுக்கு மீறிச் சாப்பிடும் போது பல உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
பொதுவாக அதிகமாகப் பூண்டு சாப்பிடும் போது சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு ஏற்படும். மேலும் இதில் உள்ள அல்லிநேஸ் எனும் என்சைம் சருமத்தில் தடிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. இதோடு அளவுக்கு அதிகமான பூண்டு தலைவலியை நமக்கு ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.