• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • விவசாய கூலி டூ இண்டர்நெட் ஸ்டார் - யுடியூப் தளத்தை கலக்கும் கங்கவ்வா பாட்டி

விவசாய கூலி டூ இண்டர்நெட் ஸ்டார் - யுடியூப் தளத்தை கலக்கும் கங்கவ்வா பாட்டி

கங்கவ்வா பாட்டி

கங்கவ்வா பாட்டி

யுடியூப் இளைஞர்களுக்கானது மட்டுமல்ல, அங்கு முதியவர்களும் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் தெலங்கானாவைச் சேர்ந்த கங்கவ்வா.. இவரது MY VILLAGE SHOW என்ற சேனல் அந்த மாநிலத்தின் பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வணிக வளாகத்திற்கு நமது பாட்டிகளை முதல் முறையாக அழைத்துச் செல்லும் போது அவர்கள் கண்கள் விரிய கடையை சுற்றிப் பார்க்கும் காட்சியில் கண கட்சிதமாக பொருந்தியிருப்பார் இந்த கங்கவ்வா. இந்த ஒற்றை வீடியோ போதும் MY VILLAGE SHOW என்ற இந்த யூடியூப் சேனலின் கருப்பொருளை விவரிக்க.....

தெலங்கானாவில் பிறந்த கங்கவ்வா மில்குரிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவர் குடிகாரர் என்பதால் விவசாயம் பார்த்தும் பீடி சுற்றியும் குடும்பத்தை இவர் பராமரித்து வந்தார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை குடும்பத்திற்காகவே செலவிட்ட இவருக்கு யூடியூபை அறிமுகப்படுத்தியது மருமகன் ஸ்ரீதர். கிராம வாழ்வியலை தத்ரூபமாகவும் அதேசமயம் நகைச்சுவை கலந்தும் இவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக இவர்கள் வெளியிட்ட வீடியோ இதுவரை 3 கோடியே 30 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.



MY VILLAGE SHOW யூடியூப் சேனலை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். தெலுங்கு திரையுலகினர் கூட தங்களின் படங்களை இந்த சேனல் மூலம் விளம்பரப்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராமில் 45,000 பேர் இவரை பின் தொடர்கின்றனர். யூடியூப் சேனல் மூலமாக கிடைக்கும் வருவாயில் இவர்கள் பகுதியில் நூலகம் ஒன்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளனர்.



சாதிக்க வயதோ, கல்வியறிவோ எப்போதும் தடையில்லை என்பதற்கு இந்த கங்கவ்வா ஒரு சிறந்த உதாரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: