Home /News /trend /

உங்கள் கண்களுக்கு சவால்.. இந்த Q வரிசைக்குள் இருக்கும் O-க்களை கண்டுபிடிங்க

உங்கள் கண்களுக்கு சவால்.. இந்த Q வரிசைக்குள் இருக்கும் O-க்களை கண்டுபிடிங்க

 மறைந்திருக்கும் எழுத்தை கண்டுபிடிக்கும் விளையாட்டு

மறைந்திருக்கும் எழுத்தை கண்டுபிடிக்கும் விளையாட்டு

மறைந்திருக்கும் விஷயத்தைக் கண்டுபிடிப்பது, ஒரு உருவத்திற்குள் பல உருவங்களைப் பதுக்கிவைப்பது, ஆளுமைத் திறனைச் சோதிப்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    புதிர்கள், மைண்ட் கேம்கள் மற்றும் சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பதில் உள்ள சுவாரஸ்யங்களை விட ஆப்டிகல் இல்யூஷன்கள் மூளைக்குச் சிறந்த சவாலாக உள்ளன. கண்ணுக்கும் மூளைக்கு வேலை தருகிற நல்ல ஒரு பொழுதுபோக்கு புதிர்களாக உள்ளதால் நெட்டிசன்கள் பலருக்கும் இதன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

    கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் ஆப்டிகல் இல்யூஷன்களை விட பிரெயின் டீஸர் பற்றிய சவால்களுக்கு மவுசு கூடி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன்கள், பிரெயின் டீஸர் என இரண்டுமே கண்களுக்கும், மூளைக்கும் ஓரே நேரத்தில் அதிக வேலை கொடுக்கக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால் ரெயின் டீஸர்கள் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கக் கூடியவையாக இருக்கின்றன. பிரெயின் டீஸர் சவால்களைத் தீர்ப்பது மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நம்முடைய நினைவாற்றலை வலுவாக வைத்திருக்கிறது.

    இன்று உங்களுக்காகச் சுவாரஸ்யம் மிகுந்த பிரெயின் டீசர் புதிரைக் கொண்டு வந்திருக்கிறோம். கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். அதில் நிறைய Q என்ற ஆங்கில எழுத்துக்கள் வரிசையாக எழுதப்பட்டுள்ளன. இது நீங்கள் மேலோட்டமாக பார்க்கும் போது கண்களுக்குத் தெரியும் காட்சி, ஆனால் கண்களைக் கூர்மையாக்கி ஒட்டுமொத்த கவனத்தையும் செலுத்தினால் படத்தில் குறுக்கு, வெட்டாக Q நிறைந்திருக்கும் Q வார்த்தைகளுக்கு இடையே O என்ற வார்த்தை மறைந்திருப்பதைக் காண முடியும்.

    மேலே உள்ள படத்தில், Q களில் உள்ள அனைத்து Osகளையும் நீங்கள் சரியாகக் கண்டறிய வேண்டும். இதற்காக உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரம் வெறும் 11 விநாடிகள் மட்டுமே. நீங்கள் நினைப்பது போல் பதில் எளிதானது அல்ல என்பதால், கேள்விக்குப் பதிலளிக்கும் முன் படத்தைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    பிரெயின் டீசருக்கான பதில்:

    இந்த பிரெயின் டீசரில் 'Q' என்ற எழுக்கள் நிறைந்துள்ள போட்டோவில் முடிந்தவரை 'O' என்ற எழுத்தைக் கண்டறிய வேண்டும். 11 வரிசைகளில் Q என்ற எழுத்து நிரப்பப்பட்டுள்ளது. 11 வினாடிகளுக்குள் அனைத்து O எழுத்துக்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதால், அனைத்து வரிசைகளையும் வேகமாகவும், தெளிவாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விடையைப் பார்க்கவும்.

    Q வரிசைக்குள் மறைந்திருக்கக்கூடிய O-க்களை கண்டுபிடிக்க முடியுமா?


    படத்தில் உள்ள Q களில் மொத்தம் 7 Oகள் மறைக்கப்பட்டுள்ளன:

    Also Read : சாலைக்காக மரத்தை வெட்டியபோது உயிரிழந்த ஏராளமான பறவைகள்... இணையத்தில் வைரலாகும் மனதை உருக்கும் வீடியோ

    முதல் வரிசையில் இரண்டாவது எழுத்தை உற்றுப்பார்த்தால் அது Q அல்ல, O என்பது தெரியும். இரண்டாவது வரிசை, 4வது வரிசை, 6வது வரிசை, 9வது வரிசை, 10 வரிசை ஆகிய அனைத்து வரிசைகளிலும் முதலில் உள்ள வார்த்தை நீங்கள் நினைத்தது போல் Q கிடையாது, O என்பது மீண்டும் ஒருமுறை உற்றுநோக்கினால் புரியும்.

    எளிதான, அதே சமயத்தில் தந்திரமான புதிரைக் கண்டறிய கணிதத்திறமைகள் எதுவும் தேவையில்லை, கூர்மையான கவனிப்பு திறன் இருந்தால் மட்டும் போதும்.
    Published by:Janvi
    First published:

    Tags: Game, Optical Illusion

    அடுத்த செய்தி