மனைவியின் செயலால் அதிர்ச்சியடைந்த கணவன் - வைரல் வீடியோ

வீடியோ காட்சிகள்

 • Share this:
  சோசியல் மீடியாவில் தினமும் பலவகையான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சில வீடியோக்கள் பார்ப்பதற்கு சென்டிமென்ட்டாக இருந்து உங்கள் கண்களில் கண்ணீரை வரவைக்கும். சில வீடியோக்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்து நகைச்சுவையாக இருக்கும். சமீபத்தில் சிறுவன் ஒருவர் செய்தி வாசிக்கும் வீடியோ இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

  ஆனால் எப்போதும் இணையத்தில் பலரால் ரசிக்கப்படும் வீடியோ என்றால் கணவன், மனைவிக்குள் நடைபெறும் அன்பு சண்டை தான். அதிலும் மனைவியிடம் சிக்கி சின்னபின்னமாகும் கணவரின் வீடியோக்கள் பல இணையத்தில் கொட்டி கிடக்கும். அதில் ஒன்று தான் தற்போது பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.

  Also Read : 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆணுறை - சர்ச்சையில் புதிய கல்வி கொள்கை

  ஆனாலும் உங்களுக்கு எல்லாம் ரொம்ப குசும்பு தான், ஒருத்தர் சிக்கிட்டா இப்புடி எல்லாம் செய்வீங்க என்று சொல்ல வைக்கிறது இந்த வீடியோ. இந்த வீடியோவை பார்த்த பின் எந்த கணவரும் மனைவிக்கு உதவி செய்ய சமையலறைக்கு வருவதற்கு யோசிப்பார்கள்.

  இந்த வீடியோவில் வரும் நபர் மும்முரமாக சமையல் அறையை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பெண் வருகிறார். அவர் அந்த ஆணின் மனைவியாக தான் இருப்பார் என்று அவரின் செயலில் இருந்தே தெரிகிறது. பர்தா அணிந்திருக்கும் அந்த பெண் கயிறு மூலம் கட்டப்பட்ட தண்ணீர் கேன் ஒன்றை அவர் கையில் கொடுக்கிறார். பின் அதன்மீது மாவு நிறைந்த தட்டை வைக்கிறார். அவர் இந்த உலகத்திற்கு ஏதோ சொல்ல வருகிறார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.   
  View this post on Instagram

   

  A post shared by hepgul5 (@hepgul5)


  ஆனால் அந்த பெண் கயிறை ஒரு கத்திரிகோலால் வெட்டிவிட, எடை சற்று என குறைந்ததால் அதன் மீது இருந்த மாவு தட்டு அந்த நபரின் முகம் முழுவதும் தெறித்து விழுந்தது. வேடிக்கையான இந்த வீடியோ இணையத்தில் வைராகி உள்ளது. பலர் இந்த வீடியோவை பலர் ஷேர் செய்தும், தங்களது கருத்தை பகிர்ந்தும் வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: