Home /News /trend /

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டூ சச்சின் வரை.. வைரலாகி வரும் ஒரு வார்த்தை ட்வீட் உருவான கதை.! 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டூ சச்சின் வரை.. வைரலாகி வரும் ஒரு வார்த்தை ட்வீட் உருவான கதை.! 

ட்விட்டர்

ட்விட்டர்

One-Word Trend | அமெரிக்க அதிபர் ஜோ பைடனில் தொடங்கி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் இந்த ஒரு வார்த்தை ட்வீட்டை தங்களது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே ட்விட்டரில் ஒரு வார்த்தையில் பதிவிடும் ட்வீட்கள் ட்ரெண்டாகி வருகிறது. வழக்கமாக வீடியோ, போட்டோ, மியூசிக், செய்திகள், சர்ச்சையான விவகாரங்கள் ஆகியன சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ட்விட்டரில் ஒரே ஒரு வார்த்தையை வைத்து கொண்டு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் ட்வீட் கள் வைரலாகி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனில் தொடங்கி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வெள்ளிக்கிழமை காலை முதல் இந்த ஒரு வார்த்தை ட்வீட்டை தங்களது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள ரயில் சேவை நிறுவனம் ஆம்ட்ராக். தனது ட்விட்டர் பக்கத்தில், 'trains' என ஒரு வார்த்தையில் ட்வீட் செய்திருந்ததையடுத்து இந்த ஒரு வார்த்தை ட்வீட் முறை புல்லட் ரயிலை விட வேகமாக பரவத் தொடங்கியது.



அமெரிக்காவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு மக்களும் இதே போல் ஒரு வார்த்தையில் ட்வீட் செய்ய ஆரம்பித்தனர். அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'Democracy' (ஜனநாயகம்) என்ற வார்த்தையை பதிவிட்டார்.



இதனையடுத்து பல்வேறு நிறுவனங்கள் தங்களது பிராண்ட் அல்லது தொழிலை பிரதிபலிக்கும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கினர். விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா “universe" (பிரபஞ்சம்) என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளது.



செய்தி மீடியாக்கள் “News” (நியூஸ்) என்றும், பிரபல ஓட்டல்கள் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் “hotels" (ஓட்டல்) என்றும் பதிவிட்டு வருகின்றன.

Also Read : இளைஞர்களுக்கு விப்ட் கிரீம் கேன்களை விற்க தடை..! ஏன் தெரியுமா.?

கிரிக்கெட் ஜாம்பவனான இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் இந்த ஒரு வார்த்தை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'cricket' (கிரிக்கெட்) என்ற வார்த்தையை ட்வீட் செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்வீட்டை இதுவரை 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர், ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஷேர்களைப் பெற்று வைரலாகி வருகிறது.



தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் ’திராவிடம்’ என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’தமிழன்' என்றும், அதிமுக ட்விட்டர் பக்கம் ’எடப்பாடியார்’ என்றும் பதிவிட்டுள்ளனர். டிடிவி தினகரன் ‘அம்மா’ என்றும், சசிகலா ‘ஒற்றுமை’ என்றும் பதிவிட்டுள்ளனர்.



சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த ஒரு வார்த்தை ட்விட்டை பிரபலங்களைக் கடந்து தற்போது வணிக நிறுவனங்களுக்கும் மார்க்கெட்டிங் காரணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் போல இந்த வைரல் விஷயத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. அதேபோல் சிலர் ஆம்ட்ராக்கில் பயிற்சிக்கு வந்த புதிய ஊழியர் யாரோ தெரியாமல் தவறாக பதிவிட்ட ட்வீட் தற்போது உலக அளவிலான ட்விட்டாக மாறிவிட்டதாக கிண்டல் செய்து வருகின்றனர். எது எப்படியோ அமெரிக்காவைச் சேர்ந்த ரயில் நிறுவனத்தின் ஒரு வார்த்தை ட்வீட், தற்போது அதிவேகமா பரவி வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Trending, Twitter

அடுத்த செய்தி