ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நான்கு கண்டங்கள் கடந்து, 30,000 கி.மீ பயணித்து உணவு டெலிவரி செய்த பெண்... சுவாரஸ்ய சம்பவம்

நான்கு கண்டங்கள் கடந்து, 30,000 கி.மீ பயணித்து உணவு டெலிவரி செய்த பெண்... சுவாரஸ்ய சம்பவம்

மானசா

மானசா

பொதுவாக, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு அல்லது கண்டத்துக்கு எதற்காக செல்வோம்? அலுவலகப் பயணம், சுற்றுலா, புதிய வேலைக்காக, படிப்புக்காக செல்வது வழக்கம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆன்லைன் உணவு டெலிவரி என்பது தற்போது மிக மிக சாதாரணமாகி விட்டது. இந்தியாவில் கூட ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு தொலை தூர டெலிவரி என்பது சமீபத்தில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் கண்டம் விட்டு கண்டம் டெலிவரி என்பது கொஞ்சம் புதுசு தான்! அதிலும் நான்கு கண்டங்கள், 30,000 கிலோ மீட்டர் பயணித்து ஒரு பெண் உணவு டெலிவரி செய்திருக்கிறார் என்பது அதிசயமாக இருக்கிறது.

  பொதுவாக, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு அல்லது கண்டத்துக்கு எதற்காக செல்வோம்? அலுவலகப் பயணம், சுற்றுலா, புதிய வேலைக்காக, படிப்புக்காக செல்வது வழக்கம். ஆனால் இங்கு ஒரு பெண்மணி நான்கு கண்டங்கள் பயணித்தது உணவு டெலிவரிக்காக! உணவு டெலிவரிக்காக செய்யப்பட்ட உலகத்தின் மிக நீளமான பயணம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  30,000 கிலோ மீட்டர்கள் பயணித்து சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகா சென்ற பெண்மணியின் பெயர் மானசா கோபால். இவர் தன்னுடைய பயணம் முழுவதையுமே வீடியோவாக எடுத்து, அதை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து இருக்கிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்வதற்காகநான்கு கண்டங்கள் பயணித்து அண்டார்டிகாவிற்கு சென்றிருக்கிறார்.

  உலக மக்கள் தொகை 8 பில்லியன்... ஆனால் நான் இன்னும் சிங்கிள்.. தெறிக்கவிடும் 90'ஸ்

  தன்னுடைய பயணம் முழுவதையுமே வீடியோ பதிவாக எடுத்த மானசா, உணவு பைக்குகளையும் சுமந்து செல்வது பதிவாகி உள்ளது. சிங்கப்பூரில் இருந்து, ஜெர்மனியில் இருக்கும் ஹம்பர்க் நகரத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து அர்ஜென்டினாவுக்கு சென்றிருக்கிறார். அர்ஜென்டினாவிலிருந்து அண்டார்டிகாவிலுள்ள உஷுவையா என்ற நகரத்திற்கு விமானத்தில் சென்றிருக்கிறார். இவ்வாறு சிங்கப்பூரிலிருந்து வேறு வேறு கண்டங்களுக்கு சென்று இறுதியில் அண்டார்டிகாவில் இருக்கும் நகரத்தை சென்றடைந்த மானசா, சிங்கப்பூரைச் சார்ந்த ஃபுட்பாண்டா என்ற ஈகோ ப்ரெண்ட்லி உணவு பார்ட்னருடன் கைகோர்த்து இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். வெவ்வேறு பாதைகளில் மானசா தன்னுடைய பயணத்தை மேற்கொண்டது வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by Maanasa Gopal (@nomadonbudget)  இந்த பயணத்தை பற்றி மானசா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ‘இன்று சிங்கப்பூலிருந்து அண்டார்டிகாவிற்கு ஒரு ஸ்பெஷல் ஃபுட் டெலிவரியை நான் மேற்கொள்கிறேன். இதற்கு ஃபுட்பாண்டா சிங்கப்பூருடன் பார்ட்னராக சேர்ந்தது எக்ஸ்சைட்டிங் ஆக இருக்கிறது. இதை நான் வெற்றிகரமாக செய்து முடிப்பேன் என்று நம்புகிறேன்.

  கள்ள உறவில் 'பொம்மை புருஷர்'.. பொம்மையை திருமணம் செய்துவிட்டு புலம்பும் பெண்.. குழப்பத்தில் இணையவாசிகள்!

  30,000 கிலோமீட்டர் கடந்து 4 கண்டங்களை தாண்டி உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு இடத்திற்கு சிங்கப்பூரின் சுவையை டெலிவரி செய்வது என்பது எல்லோருக்கும் கிடைக்காது, அடிக்கடி நடக்காது! சைவ உணவுகள், உலர வைக்கப்பட்டு பதப்படுத்திய தின்பண்டங்கள், தேநீர், பிஸ்கட், சிப்ஸ் மற்றும் பிற அத்தியாவசிய உணவுகளை டெலிவரி செய்கிறேன்’ என்று பகிர்ந்திருந்தார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Trending News, Viral News