ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மறுசுழற்சி செய்யப்பட்ட சிகரெட் பட்ஸ்களில் இருந்து Air purifiers..! கோட் எஃபோர்ட் நிறுவனம் புதிய திட்டம்..!

மறுசுழற்சி செய்யப்பட்ட சிகரெட் பட்ஸ்களில் இருந்து Air purifiers..! கோட் எஃபோர்ட் நிறுவனம் புதிய திட்டம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஒவ்வொரு சிகரெட் பட்ஸ்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பல உருப்படிகள் சாஃப்டான பொம்மைகள் முதல் டைரிகள் வரை பல தயாரிப்புகளாக மாற்றப்படுகின்றன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கழிவு மேலாண்மை என்பது இப்போது மிகவும் முக்கிய ஒரு விஷயமாக இருக்கிறது. தேசிய தலைநகரான டெல்லியின் புறநகரில் ஒரு குழுவினர் சிகரெட் துண்டுகளின் குவியல்களில் இருந்து பேப்பர், பிரவுன் ஃபைபர் மற்றும் புகையிலை தூள் என பொறுமையாக பிரித்தெடுக்கிறார்கள்.பின் ஒவ்வொரு சிகரெட் பட்ஸ்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பல உருப்படிகள் சாஃப்டான பொம்மைகள் முதல் டைரிகள் வரை பல தயாரிப்புகளாக மாற்றப்படுகின்றன. இந்த வேலையே செய்வது கோட் எஃபோர்ட் (Code Effort) பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஆகும். இது சிகரெட் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நாட்டின் முதல் நிறுவனம் ஆகும்.

உள்நாட்டில் அல்லது தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படும் சிகரெட் கழிவுகளின் ஒவ்வொரு கூறுகளையும் இந்நிறுவனம் மறுசுழற்சி செய்கிறது. இதன் மூலம் சாஃப்டான பொம்மைகள் மட்டுமின்றி காகித பைகள், தலையணைகள் போன்ற பல தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்நிறுவனம் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிகரெட் பட்ஸ்களை வெவ்வேறு தயாரிப்புகளாக மறுசுழற்சி செய்து வருகிறது. நிறுவனத்தின் இயக்குனரான நமன் குப்தா பேசுகையில், பல நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் சிகரெட் பட்ஸ்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை கொடுக்கிறோம்.

எங்களிடம் 200-க்கும் மேற்பட்ட சேகரிப்பு மையங்கள் நாட்டின் பல பகுதிகளில் உள்ளன. முழு சிகரெட்டாக இருந்து குப்பைகளாக மாறும் சிகரெட் பட்ஸ்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட குப்பை சேகரிப்பவர்களின் உதவியுடன் பல வழிகளில் எங்கள் நிறுவனம் மூலம் சேகரிக்கப்படுகின்றன. சிகரெட் பட்ஸ்களை மறுசுழற்சி செய்யும் கடின செயல்முறை விலைவாசி அதிகரித்துள்ள இந்த நேரத்தில் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு கூடுதல் வருமானம் வழங்குகிறது என்றார்.

மேலும் பேசிய குப்தா தங்கள் நிறுவனம் இதுவரை சுமார் 1.2 பில்லியனுக்கும் அதிகமான சிகரெட் பட்ஸ்களை மறுசுழற்சி செய்துள்ளதாகவும், நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் மறுசுழற்சி திறனை 2025-ஆம் ஆண்டிற்குள் மாதத்திற்கு 30 முதல் 300 டன்கள் வரை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

Read More : பொம்மை என நாகபாம்பு உடன் விளையாடிய சிறுவன்... அடுத்து நடந்தது? - ஷாக் வீடியோ

 நொய்டாவில் உள்ள எங்கள் தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்களுக்கு தங்கள் நிறுவனம் வாழ்வாதாரம் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.மறுசுழற்சி செய்யப்பட்ட சிகரெட் பட்ஸ்களில் இருந்து பொருட்களை தயாரிக்கும் பெண்களில் ஒருவரான பூனம் பேசுகையில், இந்த வேலை தனக்கு கூடுதல் வருமானத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும், வீட்டிலிருந்தே வேலை செய்வதால் வீட்டு வேலைகளை நிர்வகிக்க மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ள மிகவும் வசதியாக இருப்பதாக கூறினார்.

செயல்முறை:

சேகரிக்கப்பட்ட சிகரெட் பட்ஸ்கள் முதலில் ஃபைபர், பேப்பர் மற்றும் புகையிலை தூளாக பிரிக்கப்படுகின்றன. செல்லுலோஸ் அசிடேட்டால் செய்யப்பட்ட ஃபைபர் அல்லது சிகரெட் ஃபில்ட்டர்ஸ் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டு பின்னர் அரைக்கப்படுகின்றன. பின் இவை மக்கும் கெமிக்கல்கள் மூலம் ப்ராசஸ் செய்யப்பட்டு 24 - 36 மணி நேரம் வரை ஒரு சொல்யூஷனில் வைக்கப்படுகின்றன. இதன் விளைவாக ஒயிட் காட்டன் மெட்டீரியல் சுமார் 1 மணி நேரம் உலர வைக்கப்பட்டு பின் பதப்படுத்தப்படுகிறது. இதனால் அது சாஃப்டாகிறது. இது முக்கியமாக மென்மையான பொம்மைகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

அதே போல சிகரெட் பட்ஸ்களில் இருந்து பிரிக்கப்பட்ட பேப்பர் ஒரு ஆர்கானிக் பைண்டர், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் மறுசுழற்சிக்கான ஃப்ராக்ரன்ஸ் போன்ற கெமிக்கல்ஸ்களுடன் ட்ரீட் செய்யப்படுகிறது. மீதமுள்ள புகையிலை தூள் ஒரு செவ்வக தொட்டியில் சேகரிக்கப்படும். இது சுமார் 1 மாதத்தில் மக்கி விடுவதால், இதன் விளைவாக உருவாகும் உரம் அருகில் உள்ள கிராமங்களுக்கு வழங்கப்படுகிறது.நாள்தோறும் சுமார் 1,000 கிலோகிராம் அல்லது 3.5 மில்லியன் சிகரெட் துண்டுகளுக்கு சமமான மறுசுழற்சி செய்யப்படுவதாக கோட் எஃபோர்ட் நிறுவனம் கூறுகிறது.

தயாரிக்கப்படும் பொருட்களில் பேப்பர் ஷீட்ஸ், பேப்பர் பைகள், சாஃப்ட் டாய்ஸ், கீ செயின்ஸ், டைரிகள் மற்றும் உரத்திலிருந்து தயாரிக்கப்படும் கொசு விரட்டி உள்ளிட்டவை அடங்கும். வரும் ஆண்டுகளில் மறுசுழற்சி செய்யப்பட்ட சிகரெட் பட்ஸ்களில் இருந்து ஏர் ப்யூரிஃபையர்ஸ் உட்பட பல தயாரிப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது, 250-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அசோசியேட்டுகள் உள்ளதாகவும் குப்தா தெரிவித்துள்ளார். எங்களது மறுசுழற்சி முயற்சிக்கு எவரும் தன்னார்வமாக முன்வந்து தங்கள் சிகரெட் பட்ஸ்களை அனுப்பலாம். தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். நாங்கள் வங்கதேசம், இலங்கை மற்றும் வியட்நாமிலும் வேலை செய்கிறோம். வெளிநாடு என்னும் போது நாங்கள் ஒரு நெகிழ்வான மற்றும் கூட்டுறவு நிறுவனமாக செயல்படுகிறோம் என்று குறிப்பிட்டார்.

First published:

Tags: Trending, Viral