Home /News /trend /

குவைத் முதல் உக்ரைன் வரை - போர் சூழலில் உண்மையான மீட்பர் என்பதை உறுதி செய்த ‘ஏர் இந்தியா’ நிறுவனம்

குவைத் முதல் உக்ரைன் வரை - போர் சூழலில் உண்மையான மீட்பர் என்பதை உறுதி செய்த ‘ஏர் இந்தியா’ நிறுவனம்

Air India

Air India

Air India | குறிப்பாக கடந்த 1990ஆம் ஆண்டில் குவைத்தில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடங்கி, தற்போது உக்ரைன் போர் வரையிலும் இதுபோன்ற மீட்பு நிகழ்வுகள் ஏராளம் உண்டு.

உலகின் எந்த மூலையில் அசாதாரண சூழல் ஏற்பட்டாலும், அங்கு விரைந்து சென்று தனது குடிமக்களை பாதுகாப்பாக மீட்டு வரும், நீண்ட வரலாறு கொண்டது இந்தியா. எந்த ஒரு நாட்டில் ஆபத்து என்றாலும், இந்திய அரசு உடனடியாக களமிறங்கி அங்குள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருகிறது.

தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் அங்குள்ள இந்தியர்களில் பலரை அரசு மீட்டுள்ளதுடன், எஞ்சியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்ட அறிவிப்பின்படி, உக்ரைன் மீது கடந்த மாதம் 24ஆம் தேதி வியாழக்கிழமை முதல் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். எனினும், ஆபரேஷன் கங்கா என்னும் திட்டத்தின் மூலமாக அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் மாபெரும் எண்ணிக்கையில் மீட்கப்படுவது இது முதல்முறை அல்ல. ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தப் பணியை நீண்ட காலமாக செய்து வருகிறது.

குறிப்பாக கடந்த 1990ஆம் ஆண்டில் குவைத்தில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடங்கி, தற்போது உக்ரைன் போர் வரையிலும் இதுபோன்ற மீட்பு நிகழ்வுகள் ஏராளம் உண்டு.குவைத் மீது சதாம் ஹுசைன் போர் தொடுத்த போது

ஏறத்தாழ 30 ஆண்டுகள் கடந்து விட்டது. 1990-இல் அப்போதைய ஈராக் அதிபர் சதாம் ஹுசைன், குவைத் மீது போர் தொடுத்தார். அப்போது குவைத்தில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலமாக மீட்கப்பட்டனர். சிவில் விமானம் மூலமாக அதிகப்படியான மக்கள் மீட்கப்பட்ட இந்த வரலாறு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. ஏர் இந்தியா மற்றும் இதர விமானங்கள் மூலமாக மொத்தம் 1,75,000 மக்கள் மீட்கப்பட்டனர்.

Also Read : 'நன்றி', 'ப்ளீஸ்' என்று சொன்னால் உங்களுக்கு சிறப்பு தள்ளுபடி தரும் உணவகம் 

2006 - லெபனானில் போர் பதற்றம் நிலவியபோது

லெபனான் நாட்டை கடல் மார்க்கமாக இஸ்ரேல் சுற்றி வளைத்தது. அந்த சமயத்தில் சிரியாவின் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். கடற்படையினரும், இந்திய விமானப் படையினரும் இணைந்து லெபனானில் சிக்கித் தவித்த இந்தியர்கள், இலங்கை மக்கள், நேபாளிகள் என மொத்தம் 2,300 பேரை மீட்டு, சிப்ரஸ் நாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

Also Read : 58 வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்து வாழும் அமெரிக்க ஜோடி

2011 - லிபியா உள்நாட்டுப் போர்

லிபியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தபோது, அங்கு சிக்கியிருந்த 15,400 இந்தியர்களை இந்திய அரசு மீட்டு கொண்டு வந்தது. சர்வாதிகாரி மம்மர் கடாஃபி மற்றும் புரட்சிக் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது.2015 - யேமன் - சவுதி இடையே பதற்றம்

சவுதி தனது நேச நாடுகளுடன் இணைந்து யேமன் மீது போர் தொடுத்தது. அப்போது ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப் படையினர் இணைந்து 4,640 இந்தியர்களை மீட்டனர். இது மட்டுமல்லாமல் பிரிட்டன், பிரான்ஸ், எகிப்து, ஸ்வீடன், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 960 பேர் மீட்கப்பட்டனர்.

Also Read : டிக்கெட் இல்லாமல் விமானத்தில் சிறுவன் தன்னந்தனியாக 2700 கிலோமீட்டர் பயணம்!

2020 - கொரோனா சூழலில் வந்தே பாரத்

சர்வதேச விமானச் சேவைகளை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்த சமயத்தில் சீனா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள், போயிங் போர் விமானம் மூலமாக மீட்டு கொண்டு வரப்பட்டனர்.

Also Read : 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கிய ரஷ்யா

2021 - ஆப்கனில் தாலிபான் ஆட்சியை பிடித்த சமயம்

ஆப்கானிஸ்தானில் அரசை கவிழ்த்து, தாலிபான்கள் ஆட்சியை பிடித்தபோது அங்கு சிக்கியிருந்த இந்தியர்கள், நேபாளியர்கள் உள்ளிட்டோரை இந்திய பாதுகாப்பு படையினர் மீட்டுக் கொண்டு வந்தனர்.
Published by:Selvi M
First published:

Tags: Air India, Russia - Ukraine

அடுத்த செய்தி