ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வயதான நாயை குழந்தையைப் போல் பராமரித்து வரும் பெண்: நெகிழ வைக்கும் வீடியோ!

வயதான நாயை குழந்தையைப் போல் பராமரித்து வரும் பெண்: நெகிழ வைக்கும் வீடியோ!

நாய்

நாய்

“என்ன ஒரு இனிமையான பெண். அவருக்கு அந்த நாய் மிகவும் பிடித்துள்ளது

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  முதிவர் ஒருவர் தன் வீட்டில் வளரும் வயதான நாயே ஒரு குழந்தை போல் பராமரித்து சீராட்டி வளர்த்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் வரும் நாய், அப்பெண்ணின் மருமகனுடைய நாயாகும். பார்ப்பதற்கு மிகவும் வயதாகி நடப்பதற்கு சிரமப்படுவது போல் அந்த நாய் தோன்றுகிறது. எனவே அதற்கு பல் துலக்கி விடுவது முதல், அதனை குளிப்பாட்டுவது, கால் நகங்களை சுத்தப்படுத்துவது என அனைத்து வேலைகளையும் ஒரு குழந்தைக்கு செய்வதை போல் பார்த்து பார்த்து செய்து வருகிறார் அந்த பெண். இது பார்ப்பதற்கு மிக அழகாகவும் அனைவரையும் நெகிழ வைக்கும் படியும் உள்ளது.

  அதில் அந்த மருமகனின் பின்னணி குரலோடு அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே மிகவும் சாதுவாக உள்ள அந்த நாய்க்கு தூங்குவதற்கு படுக்கையை தயார் செய்வது முதல், நடக்கும்போது வழுக்கி விடாமல் இருக்க அதன் பாதங்களில் ஸ்டிக்கர்களையும் ஒட்டி, நடப்பதற்கு வசதி செய்தும் கொடுத்துள்ளார். மேலும் மருந்துகளை கொடுக்கும் போது, அதனை நாய்க்கு தெரியாத வண்ணம் ரொட்டியில் தடவி அதன் மீது க்ரீமை தடவி மறைத்து வைத்து நாய்க்கு கொடுக்கிறார்.

  நாய் நன்றாக தூங்குவதற்கு அதனை தடவிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.. அந்த நாய்க்கும் அது மிகவும் பிடித்துள்ளது போல் தெரிகிறது. அதுவும் அந்த தடவலை நன்றாக அனுபவித்துக் கொண்டு, சிறிது சிறிதாக சொக்கிப்போய் தூங்குகிறது. கிட்டத்தட்ட பிறந்த குழந்தையை ஒரு தாய் எப்படி பார்த்துக் கொள்வாரோ அதை போல் அப்பெண்மணி அந்த நாயை பராமரித்து வருகிறார்.

  கடலில் மறைந்திருக்கும் புதையல் தெரிகிறதா? கண்டுபிடித்தால் நீங்கள் அதிர்ஷடசாலி தான்

   சில வாரங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவானது, கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று வருவதுடன், அதிகப்படியான கமெண்ட்களையும் பெற்று வருகிறது. மேலும் அந்த வீடியோவை பார்த்து நெகிழ்ந்து போன இணையவாசிகள் பலரும் அப்பெண்மணியை பாராட்டி வருகின்றனர். மேலும் அந்த நாயையும் கமெண்ட்களில் கொஞ்சி வருகின்றனர்.


  “இப்பெண்ணை கடவுள் ஆசீர்வதிப்பாராக, அந்த செல்ல பிராணியை மிக அன்பாகவும் பாதுகாப்புடனும் பராமரித்து வருகிறார்” என்று ஒருவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

  “நான் பார்த்ததிலேயே மிக கியூட்டான ஒரு காட்சி இது தான்” என்று இன்னொருவர் கமெண்ட் செய்துள்ளார்.

  “என்ன ஒரு இனிமையான பெண். அவருக்கு அந்த நாய் மிகவும் பிடித்துள்ளது” என்று மூன்றாமவர் கமெண்ட் செய்துள்ளார்.

  விமான நிலையத்தில் திக்குமுக்காடிய வயதான தம்பதியர் - உதவிய நபருக்கு குவியும் பாராட்டு.!

   “இப்பெண்மணி நம் நாட்டின் பொக்கிஷம், அவனும் தான்” என்று அந்த நாயையும் பெண்ணையும் ஒரு சேர பாராட்டி மற்றொருவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

  இவற்றைத் தவிர்த்து பல இணையவாசிகள் ஹார்ட் எமோஜிகளையும் மற்றும் பலவிதமான எமொஜிகளையும் பதிவிட்டு தங்கள் அன்பையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Viral News, Viral Video