மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் செய்து ஹனிமூன் அனுப்பி வைத்த வினோதம்..!

தண்ணீர் பஞ்சத்தைப் போக்க கடைசி நம்பிக்கை..!

Web Desk | news18
Updated: June 10, 2019, 5:58 PM IST
மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் செய்து ஹனிமூன் அனுப்பி வைத்த வினோதம்..!
தவளை திருமணம்
Web Desk | news18
Updated: June 10, 2019, 5:58 PM IST
மற்றவர்களுக்கு இந்த செய்தி வினோதமான செயலாக இருந்தாலும் அந்த ஊர் இளைஞர்களைப் பொருத்தவரை தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க பேராசையின் கடைசி துளி நம்பிக்கை.

கர்நாடகாவில் உடுப்பியைச் சேர்ந்த இளைஞர் மன்றம் கடந்த சனிக்கிழமையன்று இரண்டு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

உடுப்பியில் உள்ள மக்கள் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் இல்லாமல் தவித்துள்ளனர். தற்போது இந்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதன் விளைவாகவே ஆண் மற்றும் பெண் தவளைகளை இரு வெவ்வேறு கிராமங்களிலிருந்து பிடித்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் மக்கள் நடுவே திருமணம் செய்து வைத்துள்ளனர். இவ்வாறு செய்தால் மழை வரும். தண்ணீர் பஞ்சம் நீங்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.
Loading...திருமணத்திற்காக இரு தவளைகளுக்கும் ஆடைகள் தைத்து அணிகலன்களும் அணிவித்துள்ளனர். இந்து முறைப்படி சடங்குகள் செய்து மந்திரம் ஓதி திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. அதில் ஆண் தவளைக்கு ’வருண்’ எனவும் பெண் தவளைக்கு ’வர்ஷா’ எனவும் பெயர் சூட்டியுள்ளனர். இறுதியாகத் திருமணம் முடிந்ததும் தவளைகளைத் தேன் நிலவுக்கு மணிப்பூர் அனுப்பி வைத்துள்ளனர்.

Watch :
First published: June 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...