ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சிகாகோ வீதியில் சேலை கட்டி அசத்திய மாப்பிள்ளை தோழர்கள் - வைரலாகும் வீடியோ.!

சிகாகோ வீதியில் சேலை கட்டி அசத்திய மாப்பிள்ளை தோழர்கள் - வைரலாகும் வீடியோ.!

சிகாகோ

சிகாகோ

Trending Video | இங்கே கொஞ்சம் வித்தியாசமாக ஒரு இந்திய திருமணத்தில், மாப்பிள்ளைத் தோழர்கள் இந்திய பெண்களை போல புடவை அணிந்து சிக்காகோ வீதியில் வலம் வந்தது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது! இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியர்கள், வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து அங்கேயே வாழ்ந்தால் கூட ஒரு சில விஷயங்களில் பாரம்பரியத்தை தொடர்ந்து கடைபிடிப்பார்கள். குறிப்பாக இந்திய பண்டிகைகள், விசேஷங்கள் மற்றும் திருமணம் எல்லாமே இந்திய முறைப்படித்தான் செய்வார்கள். இந்தியர்கள்தான் இந்திய முறைப்படி செய்ய வேண்டும், ஆனால் இங்கே கொஞ்சம் வித்தியாசமாக ஒரு இந்திய திருமணத்தில், மாப்பிள்ளைத் தோழர்கள் இந்திய பெண்களை போல புடவை அணிந்து சிக்காகோ வீதியில் வலம் வந்தது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது! இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பெரும்பாலான திருமணங்களில், மணப்பெண் தோழிகள் மாப்பிள்ளை தோழர்கள் ஆகியோர் ஒரு தீம் அல்லது நிறத்தை தேர்ந்தெடுத்து ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து இருப்பார்கள். ஆனால் சிகாகோவில் நடைபெற்ற இந்திய திருமணத்தில், கொஞ்சம் வித்தியாசமாக ஆனால் பெரிதும் வரவேற்க கூடிய அளவுக்கு வழக்கமான பாணியை உடைத்து மாப்பிள்ளை தோழர்கள் இணையத்தை கலக்கி விட்டார்கள்!

தன் நண்பனின் திருமணத்தை கொண்டாடும் விதமாக, மாப்பிள்ளையின் இரண்டு தோழர்களுமே சேலைகட்டி சிகாகோ நகரங்களில் வலம் வந்தது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மாப்பிள்ளை தோழர்கள் இருவருமே நேர்த்தியாக புடவை கட்டி, பொட்டு வைத்து, அழகாகக் காட்சியளிக்கின்றனர். பொதுவாகவே ஆண்களின் ஆடையை பெண்கள் அணியலாம், ஆனால் பெண்களின் ஆடையை ஆண்கள் அணிவது கேலியான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு வந்தது. பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவது, ஆடைகள் அணிவதில் எந்தவிதமான வேறுபாடுகளும் பார்க்கக்கூடாது என்பதை நிரூபிக்கும் விதமாக திருமணத்தில் ஆண்கள் சேலை அணிந்து ஊர்வலம் வந்தது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

Also Read : காதலித்த மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியை

இந்த இரண்டு நபர்களுமே மிகவும் அழகாக சேலை கட்டியுள்ளனர். சேலை கட்டித் திருமணத்திற்கு தயாராகும் வீடியோவை சிக்காகோ வெட்டிங் வீடியோகிராபர்களான பாராகன் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த இருவருக்கும் ஒரு பெண் சேலையில் மடிப்புகளை வைத்து கச்சிதமாக கட்டி விடுகிறார். பொட்டு வைக்கும் பொழுது, அதை ரசித்துத் கண்கள் மூடிக்கொண்டு நெற்றியைக் காட்டுவது மிக அழகாக இருக்கிறது.


ஒருவருக்கு பச்சை நிற சேலையும், மற்றொருவருக்கு நீல நிற சேலையும் பாந்தமாக இருக்கிறது. இந்தியப் பெண்களின் தோற்றத்தில், சேலை கட்டிக்கொண்டு, திருமண முகூர்த்ததுக்கு இவர்கள் சாலையில் நடந்து வந்துள்ளனர். அதே போல, மணப்பெண்ணுடன் இவர்கள் சேர்ந்து வருவதைப் பார்த்த மணமகன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து, இருவரையும் அணைத்துக் கொள்வதைப் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கிறது!

Also Read : உயரமான மலைகளுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி படுத்துக் கொண்ட நபர் - வைரலாகும் வீடியோ.!

இது வெளிநாட்டில் நடக்கக்கூடிய ஒரு சாதாரண இந்திய திருமணம் தான். ஆனால் இந்த திருமணத்தை இரண்டு ஆண்கள் சேலை கட்டிக்கொண்டு வந்து, மிக ஸ்பெஷலான திருமணமாக, மறக்கவே முடியாத ஒரு தருணமாக மாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போல நண்பர்கள் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும், மிகவும் க்யூட்டாக இருக்கிறது என்று யூசர்கள் கருத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Trending, Viral Video