இது என்ன வினோதம்..! லாக்டவுனால் சில மாதங்கள் கழித்து வீட்டிற்கு திரும்பிய பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி

லாக்டவுன் காரணமாக சில மாதங்கள் கழித்து வீட்டிற்கு வந்த பெண் வினோதமான சம்பவத்தால் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்.

இது என்ன வினோதம்..! லாக்டவுனால் சில மாதங்கள் கழித்து வீட்டிற்கு திரும்பிய பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி
  • Share this:
பிரான்சின் கெய்னில் வசித்துவரும் மாணவி டோனா போரே. கொரோனா வைரஸ் காரணமாக மக்களைப் பாதுகாக்கும் விதமாக பிரான்சில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு நகரின் மற்றொரு இடத்தில் தனது ஆண் நண்பருடன் வசித்து வந்துள்ளார்.

பிரான்சில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டோனா தனது வீட்டிற்குள் நுழைந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வீட்டிற்குள் வினோதமாக இளம்சிவப்பு நிறத்தில் குட்சிகள் போன்றவை படர்ந்து இருந்தது.

அது என்னவென்று புரியாமல் அருகில் சென்று பார்த்த பின்பு தான் புரிந்தது அது உருளை கிழங்கின் தளிர்கள் என்று. லாக்டவுன் முன்னர் டோனா சமைப்பதற்காக உருளை கிழங்கு வாங்கி வந்துள்ளார். சில மாதங்களாக அந்த கிழங்கு வெளியே இருந்ததால் அது தளிர்விட்டு அறை முழுவதும் பரவி உள்ளது.
இந்த புகைப்படங்களை டோனா தனது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நான் வீட்டிற்கு வந்த பின் இதன் அருகில் போவதற்கு எனக்கு பயமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளா்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading