ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

புற்றுநோயால் மூக்கை இழந்த பெண்..! கையில் மூக்கை வளர்த்து வெற்றிக்கரமாக முகத்திற்கு மாற்றிய மருத்துவர்கள்.!

புற்றுநோயால் மூக்கை இழந்த பெண்..! கையில் மூக்கை வளர்த்து வெற்றிக்கரமாக முகத்திற்கு மாற்றிய மருத்துவர்கள்.!

மூக்கு

மூக்கு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவர்களை மட்டுமே நம்பி தன்னுடைய வாழ்நாளை வெற்றிக்கரமாக நகர்த்தி வருகிறார் தெரியுமா.? எப்படி என நாமும் தெரிந்துக் கொள்வோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகையே அச்சுறுத்திவரும் கொடிய நோய்களில் ஒன்று தான் புற்றுநோய். நமது உடலில் நம்மை அறியாமலே உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பு வரை அழைத்துச் செல்லும் தன்மைக் கொண்டது. ஆரம்பத்திலேயே இந்த நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்தால் முறையான மருத்துவ சிகிச்சை அளித்து பல நாள்கள் உயிர் வாழ செய்யலாம். இருந்தப் போதும் இந்நோயின் மீதான அச்சம் மக்களிடமிருந்து நீங்கவில்லை என்று தான் கூற வேண்டும். இதுப்போன்ற அச்சம் ஒருபுறம் மக்களிடம் இருக்கும் இந்த சூழலில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவர்களை மட்டுமே நம்பி தன்னுடைய வாழ்நாளை வெற்றிக்கரமாக நகர்த்தி வருகிறார் தெரியுமா.? எப்படி என நாமும் தெரிந்துக் கொள்வோம்.

பிரான்ஸில் துலூஸ் நகரத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே சிகிச்சை அளித்து வந்த நிலையிலும், கடந்த 2013 ல் நாசி குழி புற்றுநோய்க்கு (Nasal cavity cancer) ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை பெற்ற பிறகு மூக்கின் ஒரு பகுதியை முற்றிலும் இழந்தார். இதனையடுத்து இவருக்கு செயற்கை மூக்கு வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். ஆனால் இந்த முயற்சி தோல்வியுற்றதால் பல ஆண்டுகள் மூக்கு இல்லாமலே வாழ்ந்து வந்துள்ளார் பிரான்ஸைச் சேர்ந்த பெண்.

இதனையடுத்து வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணிண் கையிலேயே புதிய மூக்கு ஒன்றை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். குருத்தெலும்புக்குப் பதிலாக 3 டி அச்சிடப்பட்ட உயிர் மூலப்பொருளால் செய்யப்பட்ட மூக்கு அவருக்காகத் தயாரிக்கப்பட்டு அவரது முன்கையில் பொருத்தப்பட்டது. பின்னர் அப்பெண்ணின் நெற்றியின் பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்ட தோலைப் பயன்படுத்தி 3 டி அச்சிடப்பட்ட மூக்கை மூடினர். இந்த செயல்முறை தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேற்கொள்ளப்பட்டது. மூக்கு நல்ல வளர்ச்சிப் பெற்றதும், அப்பெண்ணின் கையில் இருந்து எடுத்து முகத்தில் மருத்துவர்கள் வெற்றிக்கரமாக இடமாற்றம் செய்தனர்.

பிரான்ஸில் உள்ள துலூஸ் யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல், தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். மேலும் வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது என்றும், தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்ணும் பாதுகாப்பாக இருக்கிறார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதோடு இதற்கு உதவியாக இருந்த எலும்பு புனரமைப்பு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ சாதனங்களைத் தயாரிக்கும் பெல்ஜிய உற்பத்தியாளரான செர்ஹம் நிறுவனத்துடன் மருத்துவக் குழுக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி எனவும் கூறியுள்ளனர். இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் மருத்துவ உலகில் புதிய மைல்கல் என்றும், இந்த முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: Nose, Tamil News, Trending