Home /News /trend /

பிரிட்டிஷ் அதிகாரியை கன்னத்தில் அறைந்தேன்.. 103 வயதில் நினைவுகளைப் பகிரும் சுதந்திரப் போராட்ட வீரர்.!

பிரிட்டிஷ் அதிகாரியை கன்னத்தில் அறைந்தேன்.. 103 வயதில் நினைவுகளைப் பகிரும் சுதந்திரப் போராட்ட வீரர்.!

பிரிட்டிஷ் அதிகாரி Representative Image, Credits: Shutterstock

பிரிட்டிஷ் அதிகாரி Representative Image, Credits: Shutterstock

Freedom Fighter | இந்தியா சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு இன்னும் உயிருடன் இருக்கும் 103 வயதான இமாமுதின் குரேஷி என்ற வீரர், சுதந்திரத்திற்கு ஒரிரு நாள்களுக்கு முன்னதாக நிகழ்ந்த கசப்பான உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மக்கள் மீது தேவையில்லாத லத்தி சார்ஜ் செய்து கைது நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபத்தில் பிரிட்டிஷ் அதிகாரியை , தான் கன்னத்தில் அறைந்ததாகவும், ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரை அவர்களின் அத்துமீறல் தொடர்ந்தாக தன்னுடைய நினைவலைகளைப் பகிர்கிறார் 103 வயதான இமாமுதின் குரேஷி.

இந்திய நாட்டைக் காக்க எத்தனையோ போராட்டங்கள், ரத்தம் சிந்தி உயிரை நீத்த போராளிகளின் தியாகங்கள் தான் இப்போது நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுத்துள்ளது. காந்தியின் அகிம்சை வழியிலும், நேதாஜியின் வழிகாட்டுதலின் படி ஆயுதம் ஏந்தியும் அந்தியர்களை நாட்டை விட்டு விரட்டுவதற்குப் போராடும் காலத்திலும் ஒரு போதும் அவர்களின் அடக்கு முறைக்கு அஞ்சியதே இல்லை. உப்பு சத்தியாகிரம், தண்டி யாத்திரை, சுதேசி இயக்கம் என போராட்டங்களையும் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் வழிநடத்தினர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உணர்வுப் பூர்வமாக நாட்டு மக்களும் சுதந்திரப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தார். இதன் பயனாகத் தான் இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பாக நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை நாடெங்கும் கோலாகலமாக் கொண்டாடினோம்.

இந்த நிலையில் இந்தியா சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு இன்னும் உயிருடன் இருக்கும் 103 வயதான இமாமுதின் குரேஷி என்ற வீரர், சுதந்திரத்திற்கு ஒரிரு நாள்களுக்கு முன்னதாக நிகழ்ந்த கசப்பான உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரை அவர்களின் அத்துமீறல் தொடர்ந்ததாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க இருந்த தருணம் அது. இச்செய்திகளைக் கேட்ட நாட்டு மக்கள் உற்சாகத்துடன் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கையில் தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.இதுப்போன்று தான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆக்ராவில் மக்கள் மூவர்ணக் கொடியுடன் சந்தோஷத்தை வெளிப்படுத்த பேரணியாக சென்றனர். முகம் முழுவதும் மகிழ்ச்சியில் சென்ற மக்களைப் பார்த்து கோபமடைந்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் காரணமின்றி அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தியதோடு கைதும் செய்தார். அப்போது தனக்கு 24 வயது என்பதால் இரத்தம் சூடேறியது. என்னால் அமைதியாக பார்க்கமுடியவில்லை எனவும் கோபத்தில் பிரிட்டிஷ் அதிகாரியின் கன்னத்தில் பலமுறை தாக்கியதாகவும் இமாமுன் குரோஷி பகிர்ந்தார்.

Also Read : ஒரே நிமிடத்தில் 17 அதிக காரமிக்க மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர்..!

இதோடு பிரிட்டிஷ் அதிகாரியை திசை திருப்பி கைது செய்யப்பட்ட பொதுமக்களை காப்பற்ற உதவியுள்ளார். இதனால் கோபமடைந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் இமாமுதின் குரேஷியைத் தேடிய போது தலைமறைவாகியுள்ளார். பின்னர் 3 தினங்களுக்குப் பிறகு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகே மீண்டும் வந்ததாகத் தன்னுடைய நினைவலைகளைப் பகிர்ந்தார்.

Also Read : கிளிக்குள் மறைந்திருக்கும் பெண்ணை 5 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் அதிபுத்திசாலி.!

மேலும் அந்த காலக்கட்டத்தில் தன்னைப் போன்று இளைஞர்கள் பலர் போராடியதாகவும் பல இன்னல்களையும், கொடுமைகளையும் அனுபவித்தோம் என வேதனையுடன் தெரிவிக்கிறார். நாட்டில் 75 வது சுதந்திர தின விழாவை எந்தவித இடையூறும் கொண்டாடும் இந்த வேளையில் முகம் தெரியாத பல சுதந்திரப் போராட்ட வீரர்களை நிச்சயம் வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: Independence day, India, Trending

அடுத்த செய்தி