ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மணமக்களை பின்னுக்கு தள்ளி கியூட்டாக போஸ் கொடுத்த ‘நாய்’- வைரலாகும் புகைப்படம்!

மணமக்களை பின்னுக்கு தள்ளி கியூட்டாக போஸ் கொடுத்த ‘நாய்’- வைரலாகும் புகைப்படம்!

கியூட்டாக போஸ் கொடுத்த ‘நாய்’

கியூட்டாக போஸ் கொடுத்த ‘நாய்’

அந்த புகைப்படத்தில் திருமணம் செய்துகொள்ளும் அந்த திருமண ஜோடியின் அழகையே, ஹென்றி கைப்பற்றி கொண்டது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

திருமணத்தில் மணமக்களை பின்னுக்கு தள்ளி போஸ் கொடுத்த ஹென்றி என்ற நாய் தற்போது வைரலாகி வருகிறது.

திருமணத்தில் எப்பொழுதும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மணமகனும்,மணமகளுமே. அண்மையில் நடந்த திருமண விழா ஒன்றில் திருமண ஜோடிகளையே பின்னுக்கு தள்ளி வைரலாகி கொண்டிருக்கிறது ஒரு புகைப்படம். நீங்கள் நாயை வளர்ப்பவர்களா? ஆம் என்றால் நிச்சயம் அந்த நாய் இல்லாமல் எதையும் செய்யமாட்டீர்கள். எங்கே போனாலும் கூட்டி செல்வது முதல் அன்றாடம் விளையாடுவது வரை நீங்கள் திருமணம் செய்வதாக இருந்தாலும் அந்த இடத்தில் அந்த நாய்க்கு தான் முதலிடம் நிச்சயம் என்றே சொல்லலாம்.

எந்த ஒரு செல்லப்பிராணிகளை எடுத்து கொண்டாலும், மனிதர்களிடையே எளிதில் ஒட்டிக்கொள்ளும். அதில் ‘நாய்’ சொல்லவே தேவையில்லை.நாம் எங்கு சென்றாலும் அதுவும் வரும். நாய்கள் பொதுவாக நாம் எதை செய்தாலும் செய்யக்கூடியவை. நாம் தினமும் செய்யக்கூடிய விஷயங்கள் முதல் வெளியே செல்வது வரை என்று வைத்து கொள்ளலாம்.

வெளிநாடுகளில் திருமணத்தின் போது மோதிரங்களை எடுத்து வர நாய்களை பயன்படுத்துகிறார்கள்.ஏனென்றால் நாய்கள் போன்ற செல்லப்பிராணிகளை அதிக அளவுக்கு பாசமாக வளர்ப்பதுதான் காரணம். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மோதிரம் கொண்டு வந்த நாய் அங்கு இருந்த திருமண ஜோடிகளையே மிஞ்சும் அளவுக்கு மொத்த அழகையும் தன் பக்கம் திருப்பியுள்ளது. இந்த செய்திதான் இன்றைய ‘வைரல்’ செய்தி.

எமிலி என்பவர் சமீபத்தில் நடைபெற்ற தனது திருமண போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில் அமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்தில், எமிலிக்கு மோதிரம் கொண்டு வருபவராக ‘ஹென்றி’ என்ற நாய் நியமிக்கப்பட்டது. அப்போது திருமண நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போட்டோகிராபர், வழக்கம் போல புகைப்படம் எடுத்து கொண்டிருக்க, ஹென்றி (நாய்) முன்னாள் வந்து போஸ் கொடுத்ததை போட்டோ எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் திருமணம் செய்துகொள்ளும் அந்த திருமண ஜோடியின் அழகையே, ஹென்றி கைப்பற்றி கொண்டது. காரணம் ஹென்றி கொடுத்த ரியாக்சன் தான் காரணம். “ஹென்றி நீ அவ்வளவு அழகு, நீ தான் என்னுடைய திருமணத்தில் எங்களை பின்னுக்கு தள்ளிவிட்டாய் என்றும், எப்படி எங்களின் திருமண நிகழ்ச்சியில் அவ்வளவு அழகையும் திருடினாய்’ என்றும் ட்விட்டரில் அதன் உரிமையாளர் ஷேர் செய்துள்ளார்.

Also read... தாகத்தை தணிக்க கரடி சிறுநீர் கலந்த நீரை கொதிக்க வைக்க முயற்சித்த பெண் - கலிபோர்னியா காட்டு தீ-க்கு காரணமா?

நாய்கள் எப்பொழுதும் மனிதனின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் செயல்படும். இருந்தாலும், எமிலியின் திருமணத்தில் ஹென்றி போஸ் கொடுத்த புகைப்படம் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் எதார்த்தமானதாகவும், அழகாகவும் இருப்பதாக இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

நாய்களுக்கும் மனிதர்களுக்கும் எப்பொழுதும் இந்த மாதிரியான சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dog