Home /News /trend /

சமூக இடைவெளியுடன் கஸ்டமர்களுக்கு டெலிவரி செய்யும் துபாய் கஃபேயின் ரோபோக்கள்!

சமூக இடைவெளியுடன் கஸ்டமர்களுக்கு டெலிவரி செய்யும் துபாய் கஃபேயின் ரோபோக்கள்!

"நான் ஒரு தொழில்நுட்ப ஆர்வலன், இங்குள்ள சிறிய ரோபோக்களைப் பார்க்கும்போது, உணவு வழங்கும் Roomba vacuum மாதிரியும் கார் உற்பத்தி ஆலையில் ஒரு அசெம்பிளி லைன் எப்படி இருக்குமோ அதைப்போல் உள்ளது" என்று கஃபேயின் வாடிக்கையாளர் வின்சென்ட் மரினோ கூறினார்.

"நான் ஒரு தொழில்நுட்ப ஆர்வலன், இங்குள்ள சிறிய ரோபோக்களைப் பார்க்கும்போது, உணவு வழங்கும் Roomba vacuum மாதிரியும் கார் உற்பத்தி ஆலையில் ஒரு அசெம்பிளி லைன் எப்படி இருக்குமோ அதைப்போல் உள்ளது" என்று கஃபேயின் வாடிக்கையாளர் வின்சென்ட் மரினோ கூறினார்.

"நான் ஒரு தொழில்நுட்ப ஆர்வலன், இங்குள்ள சிறிய ரோபோக்களைப் பார்க்கும்போது, உணவு வழங்கும் Roomba vacuum மாதிரியும் கார் உற்பத்தி ஆலையில் ஒரு அசெம்பிளி லைன் எப்படி இருக்குமோ அதைப்போல் உள்ளது" என்று கஃபேயின் வாடிக்கையாளர் வின்சென்ட் மரினோ கூறினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
கொடிய கொரோனா உருவாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில் பல நாடுகளில் மக்களின் நிலைமை இன்னும் சரியாகவில்லை. கொரோனாவால் விழுந்த பல துறைகள் இன்னமும் பழைய நிலைக்கு வர முடியாமல் திணறி வரும் நிலையில் துபாயை சார்ந்த ரோபோ கஃபே என்ற ஒரு தேநீர் விடுதியில் கூட்டம் அள்ளுகிறது.

மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை டெலிவரி செய்துவருகிறது. ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோ ஒன்று  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானதை டச் ஸ்கிரீன் மூலம் கொடுத்தால் அதை சரியாக ஏற்று அவர்களுக்கானதை வழங்கி வருகிறது. 

"இது ஒரு நல்ல யோசனையாகும், குறிப்பாக இப்போதுள்ள நிலையில்," என்று எமிரைட்ஸை சேர்ந்த வாடிக்கையாளர் ஜமால் அலி ஹசன் கூறினார், மேலும் இந்த ரோபோக்கள், நான் கேட்ட பானத்தை எந்த சிந்தலும் சிதறலும் இல்லாமல் எனக்கு வழங்கியது என்றார். ரெஸ்டாரண்ட்டில் வருமானம் குறைவாக இருப்பதால், இந்த ரோபோ யோசனை நிச்சயம் வேலை செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன் ... நீங்கள் கடைக்குள் வந்து செய்யும் ஆர்டர்களை, உடனே இந்த ரோபோக்கள் உங்களுக்கு முன்னால் செய்து சில நிமிடங்களில் உங்களிடம் அளிக்கிறது. 

எங்களின் இந்த ரோபோ கஃபே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது, கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய் காரணமாக மார்ச் 2020 முதல் எங்களின் பிசினெஸ் மந்தமானது. சில மாதங்களுக்கு பிறகு இறுதியாக கடந்த ஜூன் மாதம் ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டது, அப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கட்டுப்பாடுகள் ஓரளவிற்கு தளர்த்தப்பட்டன. துபாய் அரசாங்க 'செயற்கை நுண்ணறிவு' முயற்சியின் சப்போர்ட்டோடு இந்த ரோபோ கஃபே உருவாக்கப்பட்டது. வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கும்போது அல்லது இடத்தை சுத்தப்படுத்தும்போது மட்டுமே பணியாட்கள் வந்து இடத்தை சுத்தம் செய்துவிட்டு சென்றுவிடுவார்கள். 

மற்ற நேரங்களில் வாடிக்கையாளர்களுடன் ரோபோக்கள் மட்டுமே இருக்கும். "டச் ஸ்கிரீன் மூலம், கிளையன்ட்கள் ஆர்டர் கொடுத்தால், ரோபோக்கள் ஆர்டர்களை அட்டவணை மூலம் வரிசைப்படுத்தி சிறிய சேவை போட்டில் வைக்கிறது, மேலும் சேவை போட் அதை வாடிக்கையாளருக்கு வழங்குகிறது," என்று நிர்வாக இயக்குனர், ரஷீத் எஸ்ஸா லூட்டா கூறினார்.

Also read... இணையத்தை பார்த்து முகம் முழுவதும் மஞ்சள் பேஸ்பேக் பூசிக்கொண்ட டிக்டாக் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

"நான் ஒரு தொழில்நுட்ப ஆர்வலன், இங்குள்ள சிறிய ரோபோக்களைப் பார்க்கும்போது, உணவு வழங்கும் Roomba vacuum மாதிரியும் கார் உற்பத்தி ஆலையில் ஒரு அசெம்பிளி லைன் எப்படி இருக்குமோ அதைப்போல் உள்ளது" என்று கஃபேயின் வாடிக்கையாளர் வின்சென்ட் மரினோ கூறினார். கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க தடுப்பூசி, மாஸ்க், சமூக இடைவெளி போன்றவை ஒருபுறமிருந்தாலும் சில மக்கள் இன்னமும் அச்சப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். 

மனிதர்களை மனிதர்கள் சந்திக்கும் போது எங்கே கொரோனா வந்திடுமோ என்கிற அச்சம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் மேற்கண்ட ரோபோக்களின் பயன்பாடு முன் எப்போதும் இல்லாததை விட கொரோனா காலகட்டத்திற்கு பிறகு படுவேகமாக அதிகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மனிதர்கள் செய்யும் வேலைகளை விட இந்த ரோபோக்கள் துல்லியமாக வேலைகளை செய்வதால் பல இடங்களில் இதற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Robo, Trending

அடுத்த செய்தி