Home /News /trend /

இந்த படத்தில் மனித முகம் மட்டும் தெரிந்தால் உங்கள் கண்களின் திறன் 50 சதவீதம் தான்!

இந்த படத்தில் மனித முகம் மட்டும் தெரிந்தால் உங்கள் கண்களின் திறன் 50 சதவீதம் தான்!

Trending

Trending

Optical Illusion | பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தை நீங்கள் சட்டென்று பார்க்கையில் ஒரு தோற்றத்துடனும், அதுவே கொஞ்சம் நிதானித்து வேறு திசையில் இருந்து பார்க்கும்போது வேறு ஒரு தோற்றத்துடனும் காட்சி அளிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பொழுதுபோக்கு அம்சங்களை விரும்பும் நபர்களின் அதிகபட்ச தேர்வாக இருப்பது இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத் தோற்ற படங்கள் தான். ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் புதிர்களை கண்டறிவது சுவாரசியம் அளிக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல் புத்திக்கூர்மையை மேம்படுத்துகிறது. குறிப்பாக, கவனித்தல் திறன் மற்றும் அலசி ஆராயும் போக்கு ஆகியவை மேம்படுகிறது.

பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தை நீங்கள் சட்டென்று பார்க்கையில் ஒரு தோற்றத்துடனும், அதுவே கொஞ்சம் நிதானித்து வேறு திசையில் இருந்து பார்க்கும்போது வேறு ஒரு தோற்றத்துடனும் காட்சி அளிக்கிறது. நாம் கேமிராவில் படம் பிடித்தவையாக இருந்தாலும் அல்லது வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்கள் என்றாலும் இத்தகைய மாறுபட்ட கோணங்களை அதனுள் புகுத்த முடியும்.

உக்ரைனைச் சேர்ந்த, பிரபல வரைபடக் கலைஞர் ஓலக் ஷுப்யாக் என்பவரும் இதேபோன்று ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை அவ்வபோது உருவாக்கி வருகிறார். குறிப்பாக உணவுப் பொருட்களை வரைந்து அதில் மனித முகத்தை வடிவமைத்த அவரது கலைத்திறன் மிகவும் பிரபலமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

உணவுப் பொருளா அல்லது மனிதனா.?

உக்ரைன் கலைஞர் வடிவமைத்த இந்தப் பிரபலமான ஓவியத்தை மெக்ஸிக்கன் கலை ஸ்டூடியோ ஒன்று படம் பிடித்தது. ப்ரீமியர் பத்திரிகை ஒன்று அட்டைப் படத்திற்காக இதனை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இந்த படத்தில் உங்களுக்கு மனித முகம் மட்டும் தெரிந்தால் உங்கள் கண்களின் பார்வை திறன் 50 சதவீதம் மட்டுமே என்று எடுத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த மனித முகம் பலதரப்பட்ட உணவு வகைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.



உங்கள் கண்களுக்கு முதலில் தெரிந்தது என்ன.?

இந்தப் படத்தில் ரெட் வொயின், வகை, வகையான உணவுகள் மற்றும் கட்லெரி ஆகியவற்றுடன் ஒரு இரவு விருந்துக்கு தேவையான உணவுப் பொருட்கள் இடம்பெற்றிருப்பதை உங்களில் பலர் கவனித்திருப்பீர்கள். இது தவிர வேறு ஏதேனும் உங்கள் கவனத்திற்கு வந்ததா என்பதே முக்கியமான கேள்வி.

 

ஆம், உலகில் உள்ள ஆகச் சிறந்த ரெஸ்டாரண்ட்களில் முதன்மையானதாக இருக்கும் நோமா ரெஸ்டாரண்டில் பணியாற்றும் பிரபல சமையல் கலை நிபுணர் ரேன் ரெட்செஃபியின் முக வடிவமைப்பு இந்தப் படத்தில் இருக்கிறது. அவரது முகத்தை வடிவமைப்பதற்காக உணவுப் பொருட்கள், தட்டுகள், கிளாஸ், டவல் மற்றும் கட்லெரி போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர்.

Also Read : சும்மாவே இருந்து சம்பாதிப்பது எப்படி? - இவரை பார்த்து தெரிஞ்சுகோங்க..

எப்படி வடிவமைக்கப்பட்டது இது

மெக்ஸிகன் கலை ஸ்டூடியோவில் இதனை வடிவமைக்கும்போது ஃபுளோட்சாம் மற்றும் ஜெட்சாம் போன்ற உத்திகளை பயன்படுத்தியுள்ளனர். கிளாஸ் பாட்டில்கள், வொயின் கிளாஸ், பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் கட்லெரி ஆகியவற்றை மிக நேர்த்தியாக, கவனமாக பொருத்தி ரேன் ரெட்செஃபியின் முக வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி