Home /News /trend /

வினோதமான உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ள புதிய உணவு - மேகி பரோட்டா!

வினோதமான உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ள புதிய உணவு - மேகி பரோட்டா!

Maggi Paratha

Maggi Paratha

Maggi Paratha | பொதுவாக ஏராளமான சமையல் ஆர்வலர்கள் மேகி நூடுல்சை பாலுடன் சேர்த்து சமைத்து, இது ’மேகி மில்க் ஷேக்’ என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் விதமாக, தெருவோர வியாபாரி ஒருவரால் உருவாக்கப்பட்ட புதிய வினோதமான உணவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
இன்றைய காலகட்டத்தில் இணையதளம், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமையல் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, யூ-டியூபில் உள்ள சமையல் வீடியோக்களை பார்த்தால் எண்ணற்ற நபர்கள் வினோதமான உணவுகளை தயாரித்து வீடியோ வெளியிட்டு இருப்பதை நாம் பார்க்க முடியும்.

வினோதமான பட்டியலில் இடம்பெறும் சில உணவுகள் நம்மை முகம் சுளிக்க வைப்பதாக அமையும். சில நேரங்களில் ஒரு சில உணவுகள், ஆஹா... என்று நம்மை உச்.. கொட்ட வைக்கும். கடந்த ஆண்டில் ஏராளமான வினோத உணவுகள் டிரெண்ட் ஆகின. அதே போக்கு தற்போதைய ஆண்டிலும் தொடர்கிறது. இதற்கு முன்பு உணவு ஆர்வலர்களால் தயார் செய்யப்பட்ட பேண்டா மேகி இணையம் எங்கிலும் டிரெண்ட் ஆனது. தற்போது அந்த வரிசையில் புதிய புரோட்டா இடம்பிடித்துள்ளது. ஆனால், இதுவும் மேகி கலந்து தயாரிக்கப்பட்டது ஆகும்.

பொதுவாக ஏராளமான சமையல் ஆர்வலர்கள் மேகி நூடுல்சை பாலுடன் சேர்த்து சமைத்து, இது ’மேகி மில்க் ஷேக்’ என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் விதமாக, தெருவோர வியாபாரி ஒருவரால் உருவாக்கப்பட்ட புதிய வினோதமான உணவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேகி சேர்த்து அவர் தயாரித்துள்ள புரோட்டா குறித்த வீடியோவை பலரும் ஆர்வமாக பார்க்கின்றனர். ஆனால் இதன் சுவை எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?



 




View this post on Instagram





 

A post shared by RJ Rohan (@radiokarohan)






இந்தூரைச் சேர்ந்த தெருவோர வியாபாரி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், அவர் எப்போதும்போல காய்கறி மற்றும் மேகி சேர்த்து வேக வைக்கிறார். பின்னர் அந்த தண்ணீரை வடித்துவிட்டு அந்த கலவையை புரோட்டா உள்ளே வைத்து கல்லில் வைத்து வேக வைக்கிறார். இதைத்தொடர்ந்து, அதன்மேல் வெண்ணையும் ஊற்றப்படுகிறது. இறுதியாக இந்த மேகி பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, தட்டில் மேல் அவர் அடுக்கி வைக்கிறார்.

Also Read : யானைகிட்டயே பால் குடிக்கும் 3 வயது குழந்தை!

மேகி பரோட்டாவுடன் சேர்த்து காய்கறிகள், ஆனியன் ராய்தா, சட்னி மற்றும் ஊறுகாய் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. ஆனால் மேகி மட்டுமே விரும்பி உண்ணக்கூடிய அதன் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்த பிறகு பெரும் அதிர்ச்சி அடைந்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமே வேண்டியதில்லை. இதேபோல, புரோட்டா ரசிகர்களும் இதை பார்த்து முகம் சுளிக்க கூடும்.



இந்த வீடியோவை ஏராளமானவர்கள் லைக் செய்துள்ளார்கள் என்ற போதிலும், அதன் கீழ் நெட்டிசன்கள் போட்ட கமெண்ட்கள் தான் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மேகியின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்வதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அந்த வியாபாரி இந்த புரோட்டாவில் சில பழங்களையும் சேர்த்து இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சிலர் கேலி செய்துள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Maggi, Paratha, Trending

அடுத்த செய்தி