இந்து அல்லாதவரிடமிருந்து உணவு வாங்க மாட்டேன்! வாடிக்கையாளருக்கு சோமேட்டோ அளித்த பதில்!

நீங்கள் என்னை கட்டாயப்படுத்தி உணவை வாங்கச் சொல்ல முடியாது. எனக்கு, உணவும் வேண்டாம், பணமும் வேண்டாம்

news18
Updated: July 31, 2019, 1:29 PM IST
இந்து அல்லாதவரிடமிருந்து உணவு வாங்க மாட்டேன்! வாடிக்கையாளருக்கு சோமேட்டோ அளித்த பதில்!
சோமேட்டோ
news18
Updated: July 31, 2019, 1:29 PM IST
இந்து மதத்தைச் சாராதவரிடம் உணவைக் கொடுத்து அனுப்பியதால் அந்த ஆர்டரை ரத்து செய்தேன் என்று பதிவிட்ட வாடிக்கையாளருக்கு பதிலளித்த சோமேட்டோ ’உணவுக்கு மதம் கிடையாது. உணவு என்பதே ஒரு மதம்தான்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உணவு டெலிவரி செய்யும் சேவையில் உபர், ஸ்விகி, சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சோமேட்டோ இந்தியா ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில், ‘நான் ஆர்டர் செய்திருந்த உணவை, இந்து அல்லாத ஒருவரிடம் சோமேட்டோ நிறுவனம் கொடுத்தனுப்பியது. அவர்கள், உணவு டெலிவரை செய்வதை மாற்ற மாட்டேன். பணத்தைத் திரும்பத் தரமாட்டேன் என்று கூறினார்கள். நீங்கள் என்னை கட்டாயப்படுத்தி உணவை வாங்கச் சொல்ல முடியாது. எனக்கு, உணவும் வேண்டாம், பணமும் வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.


அதற்கு பதிலளித்துள்ள சோமேட்டோ நிறுவனம், ‘உணவுக்கு மதம் கிடையாது. உணவு என்பதே மதம்தான்’என்று குறிப்பிட்டுள்ளது.

[caption id="attachment_187523" align="alignnone" width="610"]
புகார் அளித்தவரின் குறிப்பு புகார் தெரிவித்தவரின் சுய குறிப்பில், ‘என்னுடைய தேசியம், பெருமைக்குறிய இந்து(Nationalist Proud Hindu)’ என்று குறிப்பிட்டுள்ளார்.[/caption]

வாடிக்கையாளரின் பதிவு


சோமோட்டோவின் பதிலுக்கு ஆதரவாக நெட்டீசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில், இந்து அல்லாதவரிடமிருந்து உணவு வாங்க மாட்டேன் என்ற பதிவிட்டவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Also see:

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...