மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் வடா பாவ் தயாரிக்கும் இளைஞர் ஒருவர் அதனை தயாரிக்கும் விதம் பலரின் கண்களையும் அசையாது பார்க்க வைக்கின்றது.
மும்பை, போரா பஜார் தெருவில் 60 வருடமாக ரகு என்பவர் தெருவோரம் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த கடை சிற்றுண்டிகளை வழங்குவதில் மிகவும் பிரபலமானது. இவரது உணவகத்தில் இட்லி வடா, சீஸ் மற்றும் மசாலா வடா பாவ் போன்றவை வாடிக்கையாளர்கள் விரும்பி உண்ணும் உணவு. இதனை சாப்பிட ஒரு கூட்டமே அழை மோதும்.
அவர் தனது வடா பாவ்வை உருவாக்கும் விதம் தான் அவரது உணவகத்தை மிகவும் தனித்துவமாக வைத்திருக்கிறது. வடா பாவ்வை செய்யும் போது அதனை காற்றில் பறக்கவிட்டு பின்னர் அதனை பிடிக்கும் வித்தையை காணவே அவரது உணவகத்தில் கூட்டம் கூடுகின்றது.
இந்த வீடியோ யூடியூப்பில் வெளியிட்ட இரண்டு நாட்களில் 235,357 பார்வைகளைப் பெற்றுள்ளது. தற்போது 348,788 பார்வையாளர்களை பெற்றுள்ளது. பாலாடைக்கட்டி மற்றும் மசாலாக்கள் நிறைய ரகு இந்த சுவையான, ஆரோக்கியமான சிற்றுண்டியை வெறும் 15 ரூபாய்க்கு விற்கிறார்.
வடா பாவ் ஒரு சைவ உணவாகும். இவ்வகை உணவு மகாராட்டிரம் மற்றும் குஜராத் , மும்பை பகுதிகளில் மிகவும் பரவலான நொறுக்குத்தீனி வகை உணவாகும். இதில் உருளைக் கிழங்கு போண்டாவும் (வடை அல்லது வடா என்று கூறுவர்) ரொட்டியும் இருக்கும். இதனுடன் நன்கு எண்ணெயில் வறுத்த பச்சை மிளகாயை உடன் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. வடா பாவ் என்பதில் வடா என்பது வடையையும் (போண்டாவையும்) பாவ் என்பது ரொட்டியையும் குறிக்கின்றது.
இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம், சோசியல் மீடியாவில் பறக்கும் தோசை வைரலானது. மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீபாலாஜி கடையில் சுடப்படும் தோசை அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த பறக்கும் தோசை குறித்த வீடியோவை பதிவு செய்தனர். அதில் உங்கள் தட்டிற்கே தோசை பறந்து வருகிறது. இந்த பறக்கும் தோசை வீடியோ 8 கோடியே 40 லட்சம் பேரால் கவனம் பெற்று கடந்த பிப்ரவரி மாதம் இணையம் முழுக்க வைரலானது.
விறுவிறுப்பாக தோசை கல்லில் தோசை சுடும் இளைஞர் நேரடியாக அதனை வாடிக்கையாளரின் தட்டுக்கே வீசுகிறார். பலரும் இந்த வீடியோவை ஆச்சர்யத்துடன் கண்டாலும் சிலர் இது உணவை அவமானப்படுத்தும் செயல் எனவும் பதிவிட்டு வந்தனர்.