'நான் அவன் இல்லை' திரைப்படத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இப்போது அந்தப் படத்தை ஒருவர் நிஜமாக்கியுள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. புளோரிடாவை சார்ந்த நபர் ஒருவர் தனது நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் வெட்டிங் பேண்டுகளை தனது ஒரு காதலியிடமிருந்து திருடி, அதை மற்றொரு காதலிக்கு ப்ரொபோஸ் செய்ய பயன்படுத்தியுள்ளார்.
வொலூசியா கவுண்டி ஷெரிப்பின் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை, 48 வயதான ஜோசப் டேவிஸ், என்பவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் புளோரிடாவின் ஆரஞ்சு சிட்டியைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலன் வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருப்பதைக் கண்டுபிடித்து அதை துப்பறியும் நபர்களிடம் கூறினார். அப்போது தான் நடந்த உண்மையை கண்டறிய அதிகாரிகள் தங்களது விசாரணை தொடங்கினர்.
தனது வருங்கால வாழ்க்கை துணையின் Facebook பக்கத்தைப் பார்த்தபோது, உண்மையில் அந்த பெண் ஷாக் ஆகிவிட்டார். தன்னுடன் தனது காதலனுக்கு நடைபெற இருந்த வெட்டிங் பேண்டு மற்றும் நிச்சயதார்த்த மோதிரத்தை மற்றொரு பெண் அணிந்த புகைப்படத்தை இண்டர்நெட்டில் அவர் கவனித்தார், என்று ஷெரிப் அலுவலகம் நியூஸ் ரிலீசில் தெரிவித்துள்ளது. ஆரஞ்சு நகரத்தை சேர்ந்த பெண் தனது நகை பெட்டியை செக் செய்தபோது, அவரது வெட்டிங் மோதிரங்கள் காணவில்லை, இந்த வெட்டிங் மோதிரங்களுடன் அந்த பெண்ணின் பாட்டிக்கு சொந்தமான வைர மோதிரம் உட்பட பல நகைகள் அந்த பெட்டியில் இருந்ததாம்.
திருடப்பட்ட பொருளின் மொத்த மதிப்பு சுமார் $6,270 இருக்குமென ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆரஞ்சு சிட்டி ஆர்லாண்டோவிற்கும் டேடோனா கடற்கரைக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு அழகிய சிட்டியாகும். ஆரஞ்சு நகர பெண் தனது வருங்கால கணவரிடம் சென்று நடந்ததை பற்றி கேட்டார், அப்போது அந்த நபர் சில பொருட்களை மட்டுமே திருப்பி தந்தார், ஜோசப் டேவிஸ் (Joseph Davis) என்ற அந்த நபரை கைது செய்த போலீசார், அவர் மீது வாரண்ட் பிறப்பித்திருக்கின்றனர்.
அவரது காதலிகளான ஜோ பிரவுன் (Joe Brown) மற்றும் மார்கஸ் பிரவுன் (Marcus Brown) என்ற இரு பெண்களும் டேவிஸ் உடனான தங்கள் உறவை முறித்து கொண்டதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆர்லாண்டோவில் (Orlando) வசிக்கும் வருங்கால மனைவி, துப்பறியும் நபர்களிடம் ஆரஞ்சு சிட்டியை சேர்ந்த பெண் மட்டுமல்ல நானும் தான் இவரால் ஏமாற்றப்பட்டென் என்று கதையில் ஒரு ட்விஸ்ட்டை சேர்த்தார். டேவிஸ் ஒருமுறை தனது கள்ள காதலியை ஆரஞ்சு நகர பெண்ணுக்கு சொந்தமான ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று இதோ இந்த வீடு என்னுடையது தான் என்று அளந்துவிட்டிருக்கிறார். அப்போதுதான் முதல் காதலி தனது லேப்டாப் மற்றும் நகைகள் காணாமல்போனதாக ஆபிசர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அந்த காதல் மன்னனின் உண்மையான பெயர் கூட அந்த பெண்களுக்கு தெரியவில்லை. ஆனால் அந்த ஆணுக்கு வடக்கு கரோலினாவில் சொந்தக்காரர் ஒருவர் இருப்பதை அந்த பெண்கள் ஆபிசர்களிடம் கூறினர். பின்னர் எப்படியோ ஷெரிப் ஆபிசர்கள் சல்லடை போட்டு தேடி டேவிஸின் உறவினரை கண்டுபிடித்தனர். டேவிஸ் என்ற நபர் உண்மையில் நல்லவன் இல்லை என்று கூறிய ஆபிசர்கள், ஓரிகானில் நடந்த மோசமான விபத்தால் அவன் மீது கைது வாரண்ட் உள்ளதாகவும், போலியான ஐடி வைத்திருத்தல், தவறான போலிஸ் அறிக்கையை தாக்கல் செய்தல், உள்நாட்டு தாக்குதல் மற்றும் கொக்கெய்னை விற்பனை செய்தல் போன்ற வழக்குகளுக்காக அவன் முன்னர் கைது செய்யப்பட்டதாக ஷெரிப் அலுவலகம் செய்தியில் கூறியுள்ளது.
ஷெரிப் அலுவலகம் அளித்த தகவல் படி, டேவிஸின் கையில் ‘Only God can judge me’ என பச்சை குத்தியிருப்பதாக ஆபிசர்கள் கூறினர். திரைப்படங்களில் நாம் கண்ட கதைகள் இப்போது நிஜ வாழ்க்கையிலும் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் தலைதூக்கி வருகிறது. காதலிக்கும் நபர்கள் தங்கள் துணையை பற்றிய உண்மை தன்மையை அறிந்து கொண்டு பின்பு காதலில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம்.