ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Flipkart-ல் காஸ்ட்லி மொபைலை ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - வைரலாகும் ட்விட்!

Flipkart-ல் காஸ்ட்லி மொபைலை ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - வைரலாகும் ட்விட்!

Flipkart-ல் காஸ்ட்லி மொபைலை ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - வைரலாகும் ட்விட்!

Flipkart-ல் காஸ்ட்லி மொபைலை ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - வைரலாகும் ட்விட்!

பண்டிகைக் காலம் தொடர்வதால் தற்போதும் கூட மேற்கண்ட 2 மட்டுமல்ல பல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனை இருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மாபெரும் தள்ளுபடி திருவிழாவாக இருந்தன கிரேட் இந்தியன் சேல் மற்றும் பிக் பில்லியன் டே.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பண்டிகை காலத்தை முன்னிட்டு பிரபல மற்றும் முன்னணி இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்களான அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட பல சிறப்பு அதிரடி தள்ளுபடியில் விற்பனை திருவிழாவை சமீபத்தில் நடத்தின. அமேசான் நிறுவனம் கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரிலும், ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்ற பெயரிலும் விற்பனை திருவிழாவை நடத்தி முடித்தன.

  பண்டிகைக் காலம் தொடர்வதால் தற்போதும் கூட மேற்கண்ட 2 மட்டுமல்ல பல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனை இருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மாபெரும் தள்ளுபடி திருவிழாவாக இருந்தன கிரேட் இந்தியன் சேல் மற்றும் பிக் பில்லியன் டே.

  இந்த விற்பனைகளின் போது தங்கள் ஒரிஜினல் ஆர்டருக்குப் பதிலாக தொடர்பில்லாத மற்றும் வினோதமான மற்றும் மிக மலிவான தயாரிப்புகளை டெலிவரி பெற்றனர். தந்தைக்காக காஸ்டலியான லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு டிடெர்ஜென்ட் சோப்களும், ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு உருளைக்கிழங்கும் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சோஷியல் மீடியாக்களில் இந்த டாபிக் பெரும் விவாதத்திற்கு வழிவகுத்து வைரலானது.

  இதே போன்ற மற்றொரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது ஆனால் இந்த முறை பாதிக்கப்பட்டவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என கருதப்படுகிறார். ஏனென்றால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்தவருக்கு, அதை விட மதிப்பு அதிகமுள்ள ஸ்மார்ட் போன் டெலிவரி செய்யப்பட்டால் அவரை லக்கி மேன் என்று தானே கூற முடியும். அதுவும் குறிப்பிட்ட நபர் ஆர்டர் செய்தது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றால் நிச்சயம் அவர் அதிர்ஷ்டசாலி தானே...

  இது தொடர்பாக பிரபல ட்விட்டர் யூஸரான அஸ்வின் ஹெக்டே ஒரு போஸ்ட்டை ஷேர் செய்து இருக்கிறார். எனது ஃபாலோயர் ஒருவர் Flipkart-ல் ஐபோன் 13 மொபைலின் 128GB மாடலை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இறுதியில் அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட மாடல் ஐபோன் 14 ஆகும் என்று கேப்ஷன் கொடுத்து மொபைல் பாக்ஸின் பின்புறம் iPhone 14 என்று லேபிள் ஒட்டப்பட்ட இமேஜையும் ஷேர் செய்து இருக்கிறார்.

  ஐபோன் 14 லேபிளிங்கை உறுதிப்படுத்தும் இந்த ட்விட் அப்லோட் செய்யப்பட்டது முதல் வைரலாகி வருகிறது மற்றும் நெட்டிசன்களிடமிருந்து ஏராளமான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.

  இந்த போஸ்ட் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், சுமார் 500-க்கும் மேற்பட்ட ரீட்வீட்ஸ்களையும் பெற்றுள்ளது. தற்போது ஐபோன் 13 மொபைலின் ஆரம்ப விலை சுமார் ரூ.60 ஆயிரம், ஆனால் ஐபோன் 14-ன் விலை ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உள்ளது.

  இதனிடையே இது பற்றி கருத்து தெரிவித்து உள்ள ஒரு யூஸர், "ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 இரண்டுமே பார்பதற்கு மிகவும் ஒத்ததாக இருப்பதால், Flipkart நிறுவனம் ஐபோன் 14 மொபைலை ஐபோன் 13 என்று தவறாக கருதி, ஆர்டர் செய்தவருக்கு அனுப்பி இருக்கலாம்" என்று கூறி இருக்கிறார்.

  Read More: தீ வைத்து கொண்டாடியவர்களை திரும்பித் தாக்கிய ராவணன்... தசராவில் நடந்த சம்பவம் - வைரல் வீடியோ

  பெரும்பாலான யூஸர்கள் ஆர்டர் செய்த ஐபோன் 13-க்கு பதிலாக ஐபோன் 14 மொபைலை பெற்றவர் உண்மையில் மிகவும் அதிர்ஷ்டசாலி தான் என்று குறிப்பிட்டு உள்ளனர். குறிப்பிட்ட யூஸருக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக பலரும் குறிப்பிட்டாலும், உண்மையில் பில்/ஆர்டர் விவரங்கள் மற்றும் உண்மையான தயாரிப்பு உள்ளிட்டவற்றுக்கு இடையே ஏதாவது முரண்பாடு இருப்பின் வாரன்டியை கிளைம் செய்வதற்கு தகுதியற்ற நிலையை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Apple iphone, IPhone, Smartphone